18 நாளுக்கு பின் கொரோனாவிலிருந்து மீண்ட அதர்வா – உருக்கமான வேண்டுகோள்

0
1590
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

கொரோனா இரண்டாம் அலைக்கு இடையில் பல்வேறு நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா நோய் பாதிக்கப்பட்ட பலர் ‘ரெம்டெசிவிர் ‘ மருந்திற்காக பல மணி நேரம் காத்துகொண்டு இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அதர்வா கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.

- Advertisement -

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தனக்கு கொரோனா இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்த அதர்வா, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை எடுத்துவந்த நடிகர் அதர்வா, கரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,கோவிட் பரிசோதனையில் எனக்கு நெகட்டிவ் வந்துள்ளது. உங்களின் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன். கவனமாக இருங்கள், வீட்டில் இருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement