ரகுவரனின் இறப்புக்கு காரணம் பற்றி நடிகர் பப்லு பிரித்திவிராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டம் தொடங்கி 2000 காலகட்டம் வரையிலான ரசிகர்களுக்கு ரகுவரன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். நைன்ட்டீஸ் ரசிகர்களுக்கு ஒரு மிரட்டலான வில்லனாக மிகவும் பிரபலமாக இருந்தார் ரகுவரன். இவர் முதன் முதலில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படத்தில் அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின்னர் இவர் தமிழில் ‘ஏழாவது மனிதன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரகுவரன் அதன் பின் வில்லனாக நடித்தார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொரிந்து போனது. மேலும், இவர் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார்,அஜித் என்று பல நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
ரகுவரன் திரைப்பயணம்:
இதனிடையே ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோகினி அதன் பின் துணை வேடத்தில் நடித்து வருகிறார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

ரகுவரன் இறப்பு:
பிரிவிற்கு பின் நடிகர் ரகுவரனை கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ரகுவரன் இறந்தார். இவரது மரணத்திற்கு காரணம், அதிக குடிப்பழக்கம், தன்னுடைய மகனை பிரிந்த சோகம் தான் என்று கூறப்பட்டது. ரகுவரன் தன் மகன் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ரகுவரனின் மரணத்திற்கான காரணம் குறித்து நடிகர் பப்லு அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ரகுவரன் எனக்கு சீனியர்.
பிரிதிவிராஜ் பேட்டி:
அங்கு தான் எங்களுடைய நட்பு ஆரம்பமானது. நாங்கள் ரெண்டு பேருமே ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருப்போம். அவர் என்னைவிட உயரமாக இருப்பார். ஆனால், கலர் ஸ்டைல் எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கும். என்னுடைய கேர்ள் பிரண்ட்,அவருடைய கேர்ள் பிரண்ட் ரெண்டு பேருமே நெருங்கிய தோழிகள். அதோட எங்களுடைய கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருவருமே பெரிய பணக்காரர்கள். நாங்கள் ரெண்டு பேருமே பயங்கரமா ஜீரோ பேலன்ஸ் ஆளுங்க.

ரகுவரன் இறப்புக்கு காரணம்:
மேலும், ரகுவரன் போதைக்கு ரொம்பவே அடிமையாகி இருந்தார். அதனாலேயே அவருடைய போதை பழக்கத்தால் தான் அவருடைய மூளையில் இருக்கும் நினைவுப் பகுதி செயல் இழந்தது. அதுதான் அவருடைய மறைவுக்குமே காரணம். அவரை நான் திருத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தேன். அப்போதெல்லாம் அவர், உன்னுடைய வேலை எதுவோ அதை மட்டும் பார் என்று சொல்லிவிடுவார். இருந்துமே நான் அவரின் பழக்கத்தை மாற்ற தான் முயற்சி செய்தேன் என்று கூறியிருக்கிறார்.






