தமிழ்நாட்டில் ஜாதி எதிர்ப்பு, சமூக நீதி, சமத்துவம், கலப்பு திருமணம் ஆகியவை பற்றி அதிகமாக பேசுவதும் ஊக்குவித்தும் வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஜாதி கொடுமைகள் நிகழ்ந்து வந்தாலும் அதற்கு எதிராக நிறைய பேர் குரல் கொடுத்தும் வருகிறார்கள். குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலருமே ஜாதி எதிர்ப்புக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இப்படி ஜாதி எதிர்ப்புக்காக குரல் கொடுத்த பல பிரபலங்கள் அவர்களுடைய ஜாதி பெருமைகளை பேசி இருக்கும் செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் அவர்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இவர் ஒரு பேட்டியில், தனக்கு ஜாதி பெருமை பேசுவது பிடிக்காது. தன்னை சுற்றி இருப்பவர்களும் தங்களிடம் அது போன்று பேசுவது கிடையாது.
யாருமே என்னிடம் ஜாதி பற்றி எல்லாம் பேச மாட்டார்கள் என்று சொல்லியிருந்தார். ஆனால், தெலுங்கில் அளித்த ஒரு பேட்டியில் போஸ், ஆந்திரா தெலுங்கானாவில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சமுதாயத்தின் பெயரை குறிப்பிட்டு தானும் அந்த சமுதாயம் தான் என்று பேசியிருக்கிறார்.
பாக்கியராஜ் சொன்னது:
அதேபோல் தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகர், இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் முன்னாள் அரசியல்வாதியாகவும் இருந்தவர். இவர் கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் ஜாதி மத பேதங்கள் நீங்கி சமத்துவம் தழைப்பதே உண்மையான சுதந்திரம் என்றெல்லாம் பேசி இருந்தார். ஆனால், ஆந்திராவில் ஒரு குறிப்பிட்ட சமுதாய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாக்கியராஜ், அந்த சமுதாயத்திற்கே தனி மரியாதை பெருமை இருக்கிறது என்றெல்லாம் பேசி இருந்தார்.

பார்த்திபன் சொன்னது:
தமிழ் சினிமாவில் வார்த்தை ஜாலத்தால் விளையாடுபவர் பார்த்திபன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும் இவர் தமிழ்நாட்டில் ஜாதிக்கு எதிரானவர் என்றெல்லாம் குரல் கொடுத்து பேசியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் நிகழ்ச்சியில்பார்த்திபன் கலந்து இருந்தார்.
https://www.youtube.com/watch?v=D_8cqiTZ178
சாதி பற்றி சொன்னது:
அப்போது பார்த்திபன், தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று பெருமையாக பேசி இருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டில் புகழ்பெற்று விளங்கும் பிரபலங்கள் பிற மாநிலங்களுக்கு வெளியே சென்று தங்களுடைய ஜாதிகளை பற்றி பெருமையாக பேசி இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதை நெட்டிசன்கள் பலருமே விமர்சித்து வருகிறார்கள்.






