தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக திகழ்பவர் விஷ்ணுவர்தன். அஜித்தின் ஆரம்பம், பில்லா உட்பட சில படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவருடைய சகோதரர் தான் கிருஷ்ணா. இவரும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி படத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்தார்.

இவர் சினிமாவில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு தான் இவர் மீண்டும் திரும்ப சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த அலிபாபா என்ற படத்தில் மூலம் தான் இவர் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் கழுகு படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஓரிடத்தை பிடித்தார். இந்த படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
கிருஷ்ணா குறித்த தகவல்:
இந்த படத்தில் அவருடைய நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து இவர் வன்மம், யாமிருக்க பயமேன், யட்சன், யாக்கை, பண்டிகை, நிபுணன், விழித்திரு, மாரி 2, கழுகு 2 போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இவருடைய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெறவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் பல துறைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

கிருஷ்ணா திருமணம்:
திரையுலகின் பின்னணி வேலைகள் டிஜிட்டல் உள்ளிட்ட வெப் சீரிஸ் முயற்சிகள் என்று பல விஷயங்களை ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் கிருஷ்ணா அவர்களின் முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. இதனால் இவர் விவாகரத்து செய்து கொண்டார். பின் இவருடைய தோழி சாத்விகாவை திருமணம் செய்து கொண்டார். அதுவும் இவருடைய 47 வயதில் தான் இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

கிருஷ்ணா குழந்தை:
இதுவே சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய 48 வயதில் நடிகர் கிருஷ்ணா அவர்கள் அப்பாவாகி இருக்கிறார். இவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகர் கிருஷ்ணா சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், என்னுடைய குடும்பம் பெரிதாக இருக்கிறது. என்னுடைய இரண்டு பெண்களும் நலமாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.






