தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நூறு சாமி. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்வாசிகா, அஜய், சக்தி, பாலாஜி சக்திவேல், காவ்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் உண்மையான நூறு சாமி இவர்கள் தான். செல்வியின் கதையை வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சியை சேர்ந்தவர் பாஸ்கர். அவருடைய அம்மா தான் செல்வி. பாஸ்கர் தம்பி விவேக்.
நூறு சாமி படம்:
செல்வி இளம் வயதிலேயே தன்னுடைய கணவரை இழந்து விட்டார். தன்னுடைய தந்தையை இழக்கும் போது பாஸ்கர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். விவேக் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். செல்வி தன்னுடைய பிள்ளைகளுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டு வந்தார். தன்னுடைய அம்மாவுடைய மறுமணத்தை பற்றி யார் பேசினாலுமே பாஸ்கர் பயங்கரமாக கோபப்படுவாராம். அவர்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள மாட்டாராம்.

ரியல் நூறு சாமி:
கல்லூரி முடித்து வெளிஉலகம் சென்ற போதுதான் பாஸ்கருக்கு தன்னுடைய அம்மாவினுடைய நிலைமை புரிந்தது. புத்தகங்களின் வாசிப்பு, மனிதர்களுடைய பழக்கம் என்று தன்னுடைய அறிவையும் பாஸ்கர் வளர்த்தார். அதற்கு பிறகு தான் தன்னுடைய அம்மாவின் நிலைமையை நினைத்து பார்த்து, அம்மாவிற்கு மறுமணம் செய்து வைக்க யோசித்தார். இதைப் பற்றி பாஸ்கர் தன்னுடைய தம்பி விவேக்கிடம் சொன்னார்.

மகன்கள் செய்த செயல்:
அதற்கு பிறகு இருவருமே சேர்ந்து தன்னுடைய அம்மாவிற்காக கணவரை தேடினார்கள். அதோட தன்னுடைய அம்மா கல்யாணம் செய்தால் தான் தானும் கல்யாணம் செய்து கொள்வேன் என்று பாஸ்கர் உறுதியாக இருந்தார். கடைசியாக ரொம்பவே கஷ்டப்பட்டு தன்னுடைய அம்மாவிற்கு மகன்கள் திருமணமும் செய்து வைத்தார்கள். தற்போது ரொம்ப சந்தோசமாக ஒரே குடும்பமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.






