ப்பா, பரத்தின் இரட்டை குழந்தைகளா இது ? அதுக்குள்ள எப்படி வளந்துட்டாங்க பாருங்க.

0
6745
bharath

தமிழ் சினிமாவின் இளம் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் பரத் 1984ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். பரத்திற்கு ஒரு தங்கை இருக்கிறார், அவருடைய பெயர் ப்ரீத்தி. தமிழில் சங்கரின் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பின்னர், செல்லமே, காதல், பட்டியல், வெயில் உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்தார்.சிறு வயதில் இருந்தே டான்சில் மிகவும் ஆர்வமாக இருக்கும் பரத், ஒரு சர்வதேச நடன பள்ளியில் சேர்ந்து டான்ஸ் கற்றுக்கொண்டார்.

மலையாளத்தில் இவர் நடித்த ‘தி 4 பீப்பில்’ படம் 2004ல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.இவருக்கு ஜெஸ்லி ஜோஸ்வா என்கிற மனைவி உள்ளார். இவர் பரத்தின் சிறு வயது நண்பராவார் . ஜெஸ்லி துபாயில் பிறந்தவர். அங்கு படித்து பட்டம் பெற்ற பல் மருத்துவர் ஆவார்.பல ஆண்டுகள் நண்பர்களாக இருந்த இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இதையும் பாருங்க : யார சொல்றன்னு புருஞ்சதா ‘பற புத்தி’ – சமூக பெயரை குறிப்பிட்டு மீரா போட்ட சர்ச்சை பதிவு.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் 5 வருடங்களாக குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த நடிகர் பரத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. கடந்த ஆண்டு நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகள் தங்களது 2 வது பிறந்தநாளை கொண்டாடினர். அந்த பரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இன்று பரத்தின் மனைவி பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் தனது மகன்களுடன் மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் பரத். பரத் இறுதியாக காளிதாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் பரத், ஒரு பாலிவுட் படத்திலும் இரண்டு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement