பார்க்கிங் பட பாணியில் நடந்த விபரீதம். மகனைக் கடத்தித் தாக்கிய கும்பல் குறித்து பிர்லா போஸ்.

0
430
- Advertisement -

தன்னுடைய மகனை மர்ம கும்பல் கடத்தி சென்று தாக்கி இருப்பதாக நடிகர் பிர்லா போஸ் போலீசில் புகாரில் கொடுத்து இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகர் பிர்லா போஸ். இவர் பல வருடங்களாக சீரியலில் நடித்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் படங்களில் நடித்தும் வருகிறார். மேலும், சமீப காலமாக இவர் தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது இவர் ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பிர்லா போஸ் மகனை ரவுடி கும்பல் கடத்தி தாக்கி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிர்லா போஸ் பேட்டியில் கூறியிருப்பது, சென்னையில் நான் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் கீழ் வீட்டில் இருப்பவர்களுடன் எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது.

- Advertisement -

பிர்லா போஸ் பேட்டி:

ஒரு முறை அந்த வீட்டு பையன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவனைப் பார்க்க அவனுடைய நண்பர்கள் சிலர் வந்தபோது அதில் ஒரு பையன் என் காரை கொஞ்சம் சேதப்படுத்தி விட்டான். சமீபத்தில் கூட பார்க்கிங் என்று ஒரு படம் வந்ததே, அந்த படத்தின் கதை போல தான் வாகனங்களை பார்க் செய்வதில் நான் இருக்கும் பகுதியில் பிரச்சனை இருந்தது. இது தொடர்பாக நான் அந்த பையனுடைய பெற்றோரிடம் போய் பேசின போது வயது வித்தியாசம் பார்க்காமல் அந்த பையன் என்னை தலைகுறைவாக பேசினார். இதனால் என்னுடைய மகனும் அவனிடம் சண்டை போட்டான்.

பிர்லா போஸ் மகன் மீது தாக்குதல்:

இதெல்லாம் நடந்து இரண்டு மாதங்கள் மேலாகிவிட்டது. நானும் அந்த விஷயத்தை அதோடு மறந்துவிட்டு ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வந்தேன். கடந்த வாரம் முழுக்க நான் வீட்டில் இல்லை, வேட்டையன் பட சூட்டில் இருந்தேன். இதைத் தெரிந்து கொண்டு அந்தப் பையன், டியூசன் போயிட்டு வந்த என்னுடைய மகனை 10 பேர் கொண்ட கும்பல் வழி மறைந்து வேறொரு இடத்திற்கு கொண்டு போய் என் மகனை தாக்கி இருக்கிறார்கள். இந்த தாக்குதலை அந்த கீழ் வீட்டு பையன் அவருடைய நண்பர்களை வைத்து திட்டம் போட்டு செய்திருக்கிறான். என்னுடைய மகனுக்கு இரத்தம் வராமல் உள்காயம் ஏற்படும் அளவிற்கு தாக்கியிருக்கிறான்.

-விளம்பரம்-

மருத்துவர்கள் சொன்னது:

இந்த தகவல் அறிந்ததும் நான் சூட்டில் இருந்து உடனடியாகவே வீட்டுக்கு வந்து பார்த்தபோது என் மகனால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்த போது தான், ட்ரெய்னிங் எடுத்து அடித்தவர்கள் மாதிரி தெரிகிறது. மாணவர்கள் அடித்திருந்தால் நம்பவே முடியவில்லை. அதனால் நீங்கள் அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க அதுதான் சரியா இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் அடித்தது மாணவர்கள் தானா? அல்லது கூலிப்படையா? என்றும் எனக்கு தெரியவில்லை. மாணவர்களாக இருந்தால் இப்படி தாக்குதல் நடத்த பயிற்சி பெற்றிருக்கிறார்களா? என்று அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

போலீஸ் புகார்:

படிக்கும் வயதில் மாணவர்களுக்கு எதற்கு இந்த பழிவாங்கும் எண்ணம்? அடியாள் வைத்து தாக்குதல் நடத்துற அளவுக்கு நம்முடைய கலாச்சாரம் மாறிக் கொண்டிருக்கிறதா? என்று தெரியவில்லை. ஏற்கனவே அந்த கார் விவகாரத்தில் நான் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கணும் போலீஸ்க்கு போனேன். இப்போ என் மகன் தாக்கப்பட்ட உடனேயும் போலீசில் தான் புகார் தந்தேன். சம்பந்தப்பட்ட ஏரியாவில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையும் வழக்கு பதிவு செய்து சி எஸ் ஆர் பதிவு செய்து இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement