குணா படத்திற்கு பின் ரோஷினி நடிக்காதது இதனால் தான் – படத்தின் இயக்குனர் சந்தான பாரதி சொன்ன காரணம்.

0
591
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே மஞ்சுமெல் பாய்ஸ் படம் குறித்து தான். மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் கேரளாவில் மஞ்சுமெல் பாய்ஸ் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றார்கள். அங்கு குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கி கொள்கிறார். அவருடன் வந்த நண்பர்கள் எப்படி அவரை காப்பாற்றுகிறார்கள் என்பதை படத்தின் கதை. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. சொல்லப்போனால், மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது.

- Advertisement -

மஞ்சுமெல் பாய்ஸ் படம்:

மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள பகுதிகளில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த படம் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நடிகர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்து பிரபலமான படங்களில் ஒன்று குணா. நீண்ட இடைவெளிக்கு பின் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றிருக்கிறது. பிரபலங்கள் பலருமே இந்த படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் கமலஹாசனை படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் பட குழுவினர் நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்துக்களை பெற்று போட்டோ எடுத்திருக்கிறார்கள்.

சந்தானபாரதி பேட்டி:

பின் படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் மஞ்சுமோல் பாய்ஸ் படம் வெளியானதில் இருந்தே குணா படம் குறித்த செய்திகள் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ரசிகர்களும் மீண்டும் குணா படத்தை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், குணா படத்தை பல வருடங்களுக்குப் பிறகு தற்போது பேசுவதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. குணா படம் வெளிவந்த போது கிடைக்காத அங்கீகாரம் தற்போது கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

ரோஷினி குறித்து சொன்னது:

இது என்னுடைய படத்திற்கு கிடைத்த வெற்றியாக நான் நினைக்கிறேன். இந்தப் படத்தில் கமலஹாசன் மனநோயாளி கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடித்திருப்பார். அதேபோல் இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி நடித்திருந்தார். இது தான் அவருடைய முதல் மற்றும் கடைசி படம். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு போது அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அதேபோல் இந்த படத்தில் புதுமுக நடிகர்களை தான் காண்பிக்க வேண்டும் என்று மும்முறமாக இருந்தோம்.

ரோஷினி நடிக்காத காரணம்:

அப்படிதான் கதாநாயகி குறித்து நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம். மும்பையில் ரோஷினை பார்த்து அவரிடம் இந்த படத்தில் நடிப்பதற்காக கேட்டோம். அவரும் ஒத்துக் கொண்டார். இந்த படத்திற்கு பிறகு அவர் நடிக்காததற்கு காரணம், அவர்களுடைய குடும்பம் நல்ல வசதியான குடும்பம் தான். அதுமட்டுமில்லாமல் எல்லோருமே நன்றாக படித்தவர்கள். அவர்களுக்கு சினிமாவில் நடிக்கணும் அந்தத் துறையில் வரணும் என்று யாருக்கும் விருப்பமில்லை என்று கூறியிருந்தார்.

Advertisement