பக்கத்துல ஒருத்தர் உசுர குடுத்து வாசிச்சிட்டு இருக்காரு, நீங்க என்னடான்னா – விக்கி – நயனை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

0
460
- Advertisement -

நடிகை நயன்தாரா அவர்கள் தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். –

-விளம்பரம்-

இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி இருந்த ஜவான் படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படம் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த படம் அன்னபூரணி. இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட ரெடின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இதை அடுத்து தற்போது நயன்தாரா அவர்கள் கோலிவுட், பாலிவுட் என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், நயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். இதனிடைய கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

-விளம்பரம்-

திருமணமான நான்கே மாதத்தில் வாடகை தாய் மூலம் இவர்கள் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் நயன்- விக்னேஷ் சிவன் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்கள். இதனால் நயன்தாரா அவர்கள் சோசியல் மீடியா பக்கமே தலை காட்டாமல் இருந்தார்.கடந்த ஆண்டு இவர் இன்ஸ்டாகிராமில் நுழைந்தார்.

இவர் நுழைந்த கொஞ்ச நாட்களிலேயே 1 மில்லியனுக்கு அதிகமான பாலோவர்ஸ் வந்தார்கள். மேலும், நயன் தன்னுடைய instagram பக்கத்தில் பிசினஸ் ப்ரோமோசனங்களையும், தன்னுடைய மகன்களுடன் விளையாடும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் திடீர்னு தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் நயன்தாரா அன்பாலோ செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், மீண்டும் நயன்தாரா, விக்னேஷ் சிவனை பின் தொடர்ந்தார். இதனால் விக்னேஷ் சிவன், நயன்தாரா பிரிய போவதாக சமூக வலைதளத்தில் சர்ச்சைகள் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன், திருமண நாளை கொண்டாடிய போது நயன்தாரா தன்னை கட்டி அனைத்து முத்தம் கொடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

அதில் புல்லாங்குழல் களைஞர் ஒருவர் ‘ மறுவார்த்தை பேசாதே’ பாடலை வாசிக்கிறார். அதனை கேட்டதும் நயன்தாரா, விக்னேஷ் சிவனை கட்டி அனைத்து முத்த மழை பொழிகிறார். இந்த வீடியோவை கண்ட பலர் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தாலும் ஒரு சிலரோ ஒருவர் அருகில் வாசிச்சிட்டு இருக்கிறார் நீங்கள் இப்படி அநாகரீகமாக நடந்துகொள்கிறீர்கள் இதை பார்க்கும் போது ஒரு போட்டோகிராபர் மீம் தான் நினைவுக்கு வருகிறது என்று memeகளை பகிர்ந்து கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Advertisement