‘இந்தியன் 2’ படத்தின் புரமோஷன் போது கமலஹாசன் குறித்து பாபி சிம்ஹா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்-கமல் எடுத்திருக்கிறார்கள்.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருக்கிறார். லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்கக் கூடாது என்று சேனாதிபதி மீண்டும் அவதாரம் எடுக்கிறார். இதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் படத்தின் மீதி கதை. முதல் பாகத்தில் தமிழ்நாட்டில் நடந்த லஞ்சம் ஊழலை இயக்குனர் காட்டி இருந்தாலும், இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க நடக்கும் ஊழலை காட்டியிருக்கிறார்.
இந்தியன் 2 படம்:
இருந்தாலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. ‘இந்தியன்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு ‘இந்தியன் 2’விற்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லணும். சொல்லப்போனால், சங்கர் திரைப்பயணத்திலேயே இந்த படம் பெரும் தோல்வி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக அளித்த பேட்டியில் பாபி சிம்ஹா, நிகழ்ச்சி ஒன்றில் என்னிடம் தொகுப்பாளர், உங்களுக்கு பிடித்த வில்லன்? ஹீரோ? யார் என்று கேட்டார்கள். அதற்கு நான், வில்லன் என்றால் ரஜினி சார், ஹீரோ என்றால் சூப்பர் ஸ்டார் என்று சொன்னேன்.
பாபி சிம்ஹா பேட்டி:
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது அப்போது நான் சொல்லும்போது கமல் சார் சிரிப்பது போல் காட்டியிருப்பார்கள். ஆனால், அது எடிட் செய்யப்பட்டது. நான் அப்படி பேசும்போது கமல் சார் அங்கு இல்லை. நான் பேசியதற்கு முன்போ, இல்லை என்றால் பேசியதற்கு பின்பு தான் கமல் சார் வந்திருப்பார். அப்போது எடுத்ததை தான் நம்ம ஆளுங்க எடிட் செய்து போட்டு விட்டார்கள். இந்த மாதிரி வேலைகள் எல்லாம் சரியாக செய்வார்கள் என்று வேடிக்கையாக பேசியிருக்கிறார்.
பாபி சிம்ஹா திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பாபி சிம்மா. இவர் 2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்திக் கொடுத்தது 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜிகிர்தண்டா’ படம் தான்.
பாபி சிம்ஹா நடித்த படங்கள்:
இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு இவருக்கு 2014 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களில் நடித்திருக்கிறார். பாபி சிம்மா அவர்கள் ஹீரோ, வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டிக் கொண்டு வருகிறார்.