சிலர் RIP னு போடுங்க, கண்ணீர் விடுவாங்க. ஆனால், நான் – விவேக் மரணத்திற்கு பின் செல் முருகன் போட்ட முதல் உருக்கமான பதிவு.

0
236295
vivek
- Advertisement -

சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவேக்கின் மறைவில் இருந்து மீள முடியாமல் பலர் இருந்து வரும் நிலையில் விவேக்கின் நெருங்கிய நண்பரும் நடிகருமான செல் முருகன் , விவேக்கின் மறைவு குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் சமூக வலைதளத்தில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் பாருங்க : 5 மாதத்திற்கு முன் இந்தியன் 2 செட்டில் பிறந்தநாளை கொண்டாடியுள்ள விவேக் – வைரலாகும் உருக்கமான வீடியோ.

- Advertisement -

விவேக்கின் இறப்பு பலரும் சோகத்தை ஏற்படுத்தினாலும், நடிகர் செல் முருகனுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு தான். செல் முருகன் பல ஆண்டுகளாக விவேக்குடன் பணியாற்றியவர். விவேக்கின் படங்களில் நிச்சயம் செல் முருகன் இடம்பெற்று விடுவார்.சினிமாவை தாண்டி இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான், விவேக்கின் இறுதி சடங்கில் செல் முருகன் கண் கலங்கி அழுத வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இப்படி ஒரு நிலையில் விவேக்கின் இறப்பு குறித்து செல் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் விவேக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள செல் முருகன்,அவரை தவிர எனக்கு வெருயாருமில்ல, ஓர் மரணம் என்ன செய்யும் சிலர் ப்ரொபைலில் கருப்பு வைப்பார்கள். சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள். சிலர் ஆர் RIP யுடன் கடந்து போவார்கள். சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள் சிலர் கண்ணீருடன் கடந்து கொள்வார்கள்.

-விளம்பரம்-

ஆனால், உண்மையான ஜீவன் என் உயிர் தோழன் என் முருகனை விட்டு விட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே. இங்கே எல்லாருமே முருகன்தான் துணை என்பார்கள் இனி என் முருகனுக்கு யார் ?துண. விடை இல்லாமல் விரத்தியில் கேட்கிறேன். இனி அவனுக்கு யார் துணை ? யார் துணை ? யார் துணை ? என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார் நடிகர் செல் முருகன்.

Advertisement