பணம் சம்பாதிக்கும் ஆசையில் பிரியா வாரியார் பதிவிட்ட விடயம்.! வறுத்தெடுத்த ரசிகர்கள்.!

0
929
Priya-Varrier
- Advertisement -

நடிகர் நடிகைகளை வைத்து பொருட்களை விளம்பரப்படுத்துவது சாதாரண விஷயம் தான்.ஆனால் ஒரு ஒரே வீடியோவில் வந்த ரியாக்க்ஷன் மூலம் உலகளவில் புகழ்பெற்றவர் கேரளத்து நடிகை ப்ரியா வாரியர்.அந்த வீடியோவிற்கு பின்னர் ட்விட்டர் ,பேஸ்புக் சமூக வலைததளத்தில் பெரும் பிரபலமடைந்தார் பிரியா வாரியர்.

-விளம்பரம்-

ஒரு ஆதார் லவ் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் ஒரே நாளில் அதிகம் தேடப்பட்டு பிரபலம் என்ற சாதனையும் புரிந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 68 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். அதனை பயன்படுத்தி தற்போது சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதையும் படியுங்க : பிரச்சார கூட்டத்தில் சில்மிஷம் செய்த நபர்.! பளார் விட்ட குஷ்பு.! வைரலாகும் வீடியோ.!

- Advertisement -

பல நிறுவனங்களின் பொருட்களை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு அந்த பொருட்களை பிரபலப்படுத்தி வருகிறார்.இதற்காக ஒரு பதிவிற்கு மட்டும் 8 லட்சம் ரூபாய் வாங்குகிறார் பிரியா வாரியர்.விளம்பரங்களில் நடித்தால் கூட இவ்வளவு சம்பாதிக்க முடியாது.

இந்த நிலையில் பிரியா வாரியர் பிரபல நிறுவன பொருட்களை விளம்பரபடுத்தினார். ஆனால், சமூக வலைதளத்தில் என்ன தலைப்பு கொடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் அனுப்பிய இ-மெயிலை அப்படியே காபி பேஸ்ட் கொடுத்துள்ளார். இதனால்,  ”Text Content for Instagram and Facebook”  என்பதையும் சேர்த்து பதிவிட்டு விட்டார். தற்போது அது சமூக வலைத்தளத்தில் கிண்டலுக்குள்ளாகியுள்ளது. பின்னர் அந்த பதிவை எடிட் செய்து விட்டார் ப்ரியா வாரியர்.

-விளம்பரம்-
Advertisement