நான் இந்த நிலையில் இருக்க அவள் தான் காரணம்- ரஜினியின் காதலி பற்றி நடிகர் தேவன் சொன்ன விஷயம்

0
173
- Advertisement -

ரஜினியின் காதலி குறித்து நடிகர் தேவன் சொல்லி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. என்பது காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் நண்பரும், நடிகருமான தேவன் அவர்கள் பேட்டி ஒன்றில் ரஜினியின் முன்னாள் காதலி குறித்து சொன்னது, பாட்ஷா படத்தில் நடிக்க கமிட்டான போது தான் ரஜினி சாரை முதன் முதலில் பார்த்தேன்.

- Advertisement -

தேவன் பேட்டி:

அப்போது அவர், ஆனஸ்ட்ராஜ் படத்தில் என் நடிப்பை பார்த்து ரொம்பவே மனம் திறந்து பாராட்டி பேசி இருந்தார். அதற்குப் பிறகு ரூமில் நாங்கள் சேர்ந்து சாப்பிட்டோம். அப்போது அவர் உங்கள் ஃபர்ஸ்ட் லவ் பத்தி சொல்ல முடியுமா? என்று கேட்டார். அதைப் பற்றி நான் சொல்லிட்டே இருக்கும்போது ரஜினி சார் கொஞ்சம் டல்லாக ஆரம்பித்தார். உடனே நான், சார் உங்களுக்கு ஃபர்ஸ்ட் லவ் இருக்கா? என்று கேட்டேன். அவரும் சொன்னார். பெங்களூரில் ரஜினி சார் கண்டக்டராக பணியாற்றி இருந்தபோது இந்த காதல் நடந்தது.

ரஜினியின் காதலி:

அப்போது டாக்டர் நிர்மலா என்ற பெண்ணை தான் ரஜினி சார் விரும்பி இருந்தார். இருவருக்கும் பேருந்தில் தான் சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பு காதலாக மாறியது. ஒருநாள் ரஜினி சார், நிர்மலாவை தன்னுடைய மேடை நாடகம் பார்க்க அழைக்க சென்று இருந்தார். ரஜினியின் நடிப்பில் ஈர்க்கப்பட்ட நிர்மலா, அவர் நடிப்பை பாராட்டியும் இருந்தார். பின் ரஜினி சார்பில் சென்னையில் உள்ள அடையாறு ஃபிலிம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு ரஜினிக்கே தெரியாமல் விண்ணப்பம் செய்திருந்தார் நிர்மலா.

-விளம்பரம்-

ரஜினி காதலி செய்த வேலை:

அதன் பிறகு அடையாறு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் இருந்து நடிப்பு பயிற்சி எடுக்கணும் என்று ரஜினி சாருக்கு பெங்களூரு அட்ரஸ்க்கு ஒரு கார்டு வந்தது. இதை கொண்டு போய் தன்னுடைய காதலியிடம் சொல்லி இருந்தார். அதை அப்ளை பண்ணது நான் தான் என்று நிர்மலா சொன்னார். உடனே அங்க போக என்னிடம் பணம் இல்லை என்று சொல்லி ரஜினி வருத்தப்பட்டார். உடனே நிர்மலா தன்னுடைய கையில் இருந்த பணத்தை கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

ரஜினி சோகம்:

மீண்டும் பெங்களூர் வந்த ரஜினி சார் நிர்மலாவை பார்க்கப் போனார். அங்கு அவருக்கு பேர் அதிர்ச்சி தான் விழுந்தது. அங்கு நிர்மலாவும் அவருடைய குடும்பத்தினருமே தெரியாத இடத்திற்கு போய்விட்டதாக தகவல் கிடைத்தது. இதனால் ரஜினி சார் ரொம்பவே நிலைகுலைந்து விட்டார். தன்னுடைய காதலி இல்லைன்னா இந்த நிலைமைக்கு தான் வந்திருக்க முடியாது என்று கண்கலங்கி சொல்லி இருந்தார். அந்த வலியில் இருந்து அவரால் வெளிவர முடியாமல் ரொம்பவே புலம்பியும் இருந்தார். ஆனால், இப்போது வரை அந்த பெண், ரஜினி சாரை வந்து பார்க்கவில்லை என்று கூறி இருந்தார்.

Advertisement