மாணவர்களை அழ வைத்து குற்ற உணர்ச்சியில் தள்ளுகிறேனா? விமர்சங்களுக்கு தாமு விளக்கம்.

0
521
- Advertisement -

தன்னை குறித்த விமர்சனத்திற்கு நடிகர் தாமு கொடுத்திருக்கும் பதிலடிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காமெடி நடிகரான தாமு மறைந்த குடியரசு தலைவரின் சிறந்த மாணவன் என்றும் கூறலாம். அப்துல் கலாமின் சிந்தனைகளை மட்டுமல்ல செயல்களையும் ‘லீட் இந்தியா ‘ என்ற அமைப்பின் மூலம் மாணவர்களிடன் கொண்டு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கி வருகிறார். காமெடி நடிகரான தாமு எண்ணெற்ற படங்களில் பல முன்னனி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக இவரை திரைப்படங்களில் பெரிதாக காண முடிவதில்லை. இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதிலும் இவர் பேசும் பேச்சுக்களை கேட்டு மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களே கண்கலங்கி அழுகிறார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ஆரணியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நடிகர் தாமு, மாணவர்கள் முன்பு உரையாற்றினார். அப்போது வழக்கம்போல உருக்கமாக பேசிய தாமுவின் பேச்சை கேட்டு மாணவர்கள் கதறி அழுதனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இது குறித்து பலரும், எப்படி பள்ளி நிர்வாகங்கள் இதை ஏற்பாடு பண்றாங்க. மனதளவுல ஆக்கபூர்வமா நேர்மறையா மாணவர்களை தயார் செய்ய வேண்டிய இடம் பள்ளிக்கூடங்கள். நம்பிக்கைய விதைக்க வேண்டிய இடம் வகுப்பறைகள். அவங்களை குற்றவாளிகளாக்கி அழ வெச்சுட்டு இருக்கீங்க. மனசை குற்றவாளிகளாக்கி பாதிச்சு அவங்க அடிப்படை நம்பிக்கையையே இது சிதைக்கும். நியாயமாய் பார்த்தால் தாமுவைக் கைது செய்ய வேண்டும்.

- Advertisement -

நிகழ்ச்சியில் தாமு:

சமூக சூழலியலை பாதிக்கிற இவ்வகை பிற்போக்குத்தனமான நிகழ்ச்சிகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தடை செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் எதுவும் தெரியாத குழந்தைகளை தேவையில்லாமல் குற்ற உணர்ச்சிக்கு தள்ளுகிறார். இது முற்றிலும் தவறான செயல் என்றெல்லாம் விமர்சித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் தாமு பேட்டியில், கடந்த 12 வருடமாக நான் மாணவர்களை சந்தித்து தன்னம்பிக்கை கொடுத்துக் கொண்டு வருகிறேன். இதுவரைக்கும் என் நிகழ்ச்சியை யாருமே விமர்சித்தது கிடையாது. பள்ளிக்கு நான் வெறும் மோட்டிவேட்டாக மட்டும் போகவில்லை.

நெட்டிசன்கள் விமர்சனம்:

ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தூதுவராக தான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆசிரியர், பெற்றோர்களின் மகத்துவத்தை மாணவர்களுக்கு புரிய வைக்கிறேன். பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்லது தான் நினைப்பார்கள். நல்லது தான் சொல்வார்கள். ஆனால், பிள்ளைகள் பெற்றவர்கள் பேச்சை கேட்பதில்லை. அதேபோல் ஆசிரியர்களையும் உதாசீனப் படுத்துகிறார்கள். இதெல்லாம் தப்பு என்பதை தான் நான் மாணவர்களுக்கு உணர வைக்கிறேன். அவர்களும் உணர்ந்து புதிதாக பிறக்கிறார்கள். குழந்தைகள் பிறக்கும்போது அழ தானே செய்வார்கள். அப்படித்தான் மாணவர்களும் தங்கள் தவறை உணர்ந்து புதுசாக பிறக்கும்போது அழுகிறார்கள்.

-விளம்பரம்-

தாமு கொடுத்த விளக்கம்:

இன்னும் சொல்ல போனால் பெற்றோர் இல்லாமல் நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. ஆசிரியர்களும் பெற்றோர்களும் இருந்தால் மட்டும்தான் பேசுகிறேன். உங்கள் பேச்சை கேட்டதிலிருந்து என் பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள். ஆளே மாறி விட்டார்கள் என்று பல பெற்றோர்கள் மனநிறைவாக சொல்லியிருக்கிறார்கள். என் பேச்சில் ஏதாவது குற்றம் இருந்தால் அவர்கள் எப்படி என்னை ஆதரிப்பார்கள்? ஏதாவது தப்பு இருந்தால் காவல்துறை என்னை நிகழ்ச்சி நடத்த கூப்பிடுமா? போதை பொருள்களை எதிர்த்து நிகழ்த்தி ஏற்பாடு பண்ணுங்க என்று அரசு தான் சொல்லுமா? இந்த விஷயத்தை யார் செய்தாலும் பாராட்டுவேன்.

மாணவர்கள் குறித்து சொன்னது:

என்னை நெகட்டிவ் ஆக விமர்சிக்கிறவர்கள் இதை பண்ணட்டும். நான் பள்ளிக்கு செல்வதை நிறுத்திக் கொள்கிறேன். சினிமாவுக்கு போய் விடுகிறேன். யாருமே இதை கையில் எடுக்காததால் தான் நான் எடுத்தேன். எப்படி இது தப்பாகும்? உண்மையை சொல்லணும் என்றால், நான் செய்யும் நல்ல விஷயத்தை ஊடகங்கள் தான் திசை திருப்புகிறது. நான் போய், நீங்கள் அழுங்கள் என்று சொல்வது கிடையாது. என் பேச்சைக் கேட்டு அவர்கள் அழுகிறார்கள். அழுவதை மட்டும் தான் ஊடகங்கள் வெளியில் காட்டுகிறது. இரண்டு மணி நேரம் மாணவர்களை நான் சிரிக்கவும் வைக்கிறேன். அதையெல்லாம் காட்டுவதில்லை. நிகழ்ச்சியை முழுசாக பார்த்துவிட்டு பேசணும். எனக்கு மாணவர்களின் முன்னேற்றம்தான் முக்கியம். விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்பட போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement