அக்காவின் திருமணத்தில் அப்பாவியான முகத்துடன் தனுஷ் – அறிய புகைப்படம்.

0
307
dhanush
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ சினிமா பிரபலங்களில் வாரிசுகள் சினிமாவில் கலக்கி வருகின்றனர். விஜய், ஜெயம் ரவி, ஜீவா, அதர்வா, சூர்யா, கார்த்தி என்று இப்படி எத்தனையோ நடிகர்களை சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் சினிமா குடும்பத்தில் இருந்து வந்து சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை செய்தது. அதே போல இறுதியாக நடிகர் தனுஷ் நடிப்பில் செந்தில் குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த படம் “பட்டாஸ்”. கடந்த வருடம் தொடக்கத்திலேயே தனுஷ் அவர்கள் வேற லெவல் மாஸ் காட்டி உள்ளார்.

இதையும் பாருங்க : அசையும் சொத்து இத்தனை கோடி, அசையா சொத்து இத்தனை கோடி, கடன் மட்டும் இத்தனை கோடி – வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள கமல்.

- Advertisement -

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ்க்கு, இயக்குனர் செல்வராகவனை தவிர இரண்டு சகோதரிகள் உள்ளார்கள். அதில் மகப்பேறு மருத்துவராக இருந்து வருபவர் தான் கார்த்திகா. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளும் இறுகின்றனர். ஒரு சில மாதத்திற்கு முன்னர் தனுஷின் சகோதரி தனது குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான பதிவை பகிர்ந்திருந்தார்.

அதே போல கடந்த ஆண்டு தனது பிள்ளைகளுக்கு தாய் மாமன் மடியில் வைத்து மொட்டை அடித்து அழகு பார்த்தார் தனுஷின் சகோதரி கார்த்திகா. இப்படி ஒரு நிலையில் நடிகர் தனுஷ், கார்த்திகாவின் திருமணத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அக்காவின் திருமணத்திற்கு முன்பாகவே நடிகர் தனுஷ் திருமணத்தை முடித்து இருந்தார். அதனால் தான் இந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யாவும் இருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement