ஹீரோவாக களமிறங்கிய என்னமா ராமர். டைட்டிலை பாருங்க. என்னமா இப்படி பண்றீங்களேமா.

0
2570
ramar

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் காமெடி நடிகர் ராமர். தற்போது ராமர் அவர்கள் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. மேலும்,படத்தின் டைட்டிலை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் உறைந்து போய் வாயடைத்து விட்டார்கள். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை கலாய்க்க “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்று ராமர் கூறினார்.ஆனால், அந்த ஒரு வார்த்தையின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து விட்டார். மேலும், இவரை அனைவரும் “என்னம்மா ராமர்” என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இவருக்கு காமெடி திறமை மட்டும் இல்லாமல் பாடும் திறமையும் கொண்டவர் என்று தெரியவந்தது. ‘அடி ஆத்தாடி என்ன உடம்பு’ என்ற பாடலை அவருடைய ஸ்டைலில் பாடி ஆடியதன் முலம் தமிழக மக்களின் மனதின் நீங்கா இடம் பிடித்தார்.

pooda mundam க்கான பட முடிவு

- Advertisement -

அதோடு சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தவர். ரசிகர்கள் மத்தியில் ராமருக்கு இருக்கும் புகழையும் பிரபலத்தையும் வைத்து இவருக்கு கோலிவுட்டில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் கோமாளி, சிக்ஸர் உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய காமெடி திறமையை காண்பித்து உள்ளார். இந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது. மேலும், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சஞ்சை கல்ராணி அவர்களும் நடித்து வருகிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, டார்லிங் நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா தான். சஞ்சை கல்ராணி கன்னடத்தில் மிக பிரபலமான நடிகை. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் “தமிழ் இனி” என்ற குறும் படத்தை இயக்கியவர் மணி ராம்.

இதையும் பாருங்க : புகைப்படங்களை வெளியிட்டதால் ஏற்பட்ட விபரீதம். ரம்யா பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு.

இந்த குறும்படத்தின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். பின் இவர் தற்போது ராமர் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகிறார். ஜபீஸ் கே கணேஷ் அவர்கள் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஷ்ணு விஜய் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கற்பனை, காமெடி, திரில்லர் என அனைத்தும் கலந்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார்கள். இதை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்கள். அது என்ன, “போடா முண்டம்” என்பது தான். மேலும், இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த படத்தின் டைட்டில் உள்ளது என்றும், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

-விளம்பரம்-
vijay tv ramar

மேலும்,போடா முண்டம் என்ற தலைப்பை பார்த்து ரசிகர்கள் எல்லாம் ராமர் ஸ்டைலிலேயே ‘என்னம்மா இப்படி எல்லாம் டைட்டில் வைப்பதா’ என்று சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். அதோடு கிண்டல் கேலி எல்லாம் செய்யலாம் என்று நினைத்தால் அந்த படத்தின் டைட்டில் வைக்கலாம் என்று திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மனிதனும் தன்னை மறைத்துக் கொள்ள பல்வேறு முகமூடிகளை பயன்படுத்துகிறார். அதை வெளிப்படுத்தும் வகையில் கற்பனையும் நகைச்சுவையும் கலந்து த்ரில்லிங்காக இந்த படத்தில் காட்டுகிறார்கள்.

Advertisement