கவுண்டமணியின் ரீ-என்ட்ரி, முன்னனி காமடி நடிகருடன் கூட்டணி, இதோ படத்தின் பூஜை. படம் பெயர் என்ன தெரியுமா ?

0
685
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான். அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம் படுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய கவுண்டர்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது உள்ள நிறைய நடிகர்கள் வரை என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் பிறந்தது திருப்பூர் மாவட்டம் மடத்தூர் கிராமம் என்றாலும் இவர் வாலிப பருவத்தில் வளர்ந்தது எல்லாம் வல்லகுண்டபுரம் என்ற கிராமம் தான்.

- Advertisement -

கவுண்டமணி பூர்விகம்:

இது உடுமலை, பொள்ளாச்சிக்கும் இடையில் இருக்கு. இந்த வல்லகுண்டபுரம் கிராமம் கவுண்டமணியின் பாட்டி வீடாகும். அதோட கவுண்டமணியின் அக்காவும் அங்கே தான் இருக்கிறார். இவர் முதலில் நாடக மேடையில் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு சினிமாவில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்தார். முதலில் இவர் தனியாக தான் படங்களில் கலக்கி வந்தார். பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.

கவுண்டமணி– செந்தில் காம்போ :

அதிலும் கவுண்டமணி– செந்தில் காம்போ எல்லாம் வேற லெவல். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது. இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

மீண்டும் சினிமாவில் கவுண்டமணி :

மேலும் சில படங்களில் கதாநாயகனாகவும் கலக்கியுள்ளார். ஆனால் இவர் 2016ஆம் ஆண்டில் வெளியான “வாய்மை” என்ற படத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் வந்த கவுண்டமணி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சினிமாவில் களமிறங்கி விட்டார். இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் “பழனிசாமி வாத்தியார்” என்ற திரைப்படத்தில் தற்போது நடிக்க உள்ளார்.

கவுண்டமணி – யோகிபாபு :

இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் இப்படத்தில் காமெடி கிங் கவுண்டமணியுடன் தற்போது பிரபல காமெடியனாக வலம் வரும் யோகி பாபு நடிக்கயுள்ளார். மேலும் இப்படத்திற்கு நடிகர் ஜீவா நடித்த முகமூடி படத்தில் இசையமைத்த கே இசையமைக்கிறார். இந்த நிலையில் தான் படத்திற்கான பூஜை 20/1/2023 நடந்தது. இதில் கவுண்டமணி கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement