விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் மலர் ரொம்ப சந்தோஷமாக பாக்கியராஜ் உடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். பாக்யராஜ், மலருக்கு தேவையான அனைத்துமே வாங்கிக் கொடுத்தார். இன்னொரு பக்கம் தங்கராஜ் கொடுத்த தண்டனைக்காக ரேவதி வெளியே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். தங்கராஜ் கொஞ்சம் கூட ஈவிறக்கம் இல்லாமல் உள்ளயே பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சுரேஷ், மதியிடம் மலரை பற்றி விசாரித்தார். மதி, அவர்கள் இருவரும் வெளியே சென்று இருக்கிறார்கள். வீட்டில் யாருக்கும் தெரியாது. குழந்தை நம்முடன் தான் தூங்க போகிறார் என்றார். இதனால் சுரேஷும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்

சந்தோசமாக ஊர் சுற்றி முடித்து பாக்கியராஜ், மலர் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். மலர் சந்தோஷமாக மதியிடம் நடந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து மலரின் மாமியார் வந்து விட்டார். அப்போது அவர், என்ன நடக்கிறது? எங்கேயே வெளியே போன மாதிரி இருக்கிறது? என்று எல்லாம் கேட்டார். பயத்தில் மலரால் எதுவுமே பேச முடியவில்லை. மதி, அவர்கள் எங்கும் போகவில்லை. அவங்க அம்மா கொடுத்த சுடிதரை போட்டு பார்த்தார். அவ்வளவு தான் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். மலரின் மாமியாரும் அதை நம்பி விட்டு உள்ளே சென்று விட்டார். அதற்குப்பின் மதி செய்த விஷயத்தை பாராட்டி சுரேஷ் பேசி இருந்தார்.
அழகே அழகு:
மதி, மலர் இந்த வீட்டிற்காக ரொம்பவே கஷ்டப்படுகிறார். அதனால் தான் இப்படி செய்தேன் என்றார். இன்னொரு பக்கம் பாக்கியராஜ் ஃபோனில் தங்கராஜ் வைத்த மெசேஜ் எல்லாம் கேட்டார். ரேவதிக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமோ? என்று பயப்பட்டார். பின் யாருக்கும் தெரியாமல் பாக்யராஜ் கிளம்பி ரேவதி வீட்டிற்கு போனார். அங்கு வாசலில் ரேவதி உட்கார்ந்திருப்பதை பார்த்து பாக்கியராஜ் பதறிப் போனார். என்ன நடந்தது? என்று பாக்கியராஜ் விசாரித்தார். ரேவதி எதுவும் பேசாமல் அழுதார். அந்த சமயம் பார்த்து தங்கராஜ் வெளியே வந்து ரொம்ப திமிராக பேசி இருந்தார். பாக்யராஜ், ரேவதிக்காக சப்போர்ட் செய்து பேசி இருந்தார். தங்கராஜ், என்னை மீறி உன் அண்ணனுடன் சென்று விடுவாயா? என்றார். ரேவதி என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் தங்கராஜ், ரேவதியை உள்ளே போ என்று சொல்கிறார். பாக்கியராஜ், எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம். நீ என்னுடன் வீட்டிற்கு வா என்று ரேவதி கையை பிடித்து இழுக்கிறார். ரேவதி, நீ வீட்டிற்கு கிளம்பு. நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே என்று தன்னுடைய அண்ணனை அனுப்பி வைத்து வீட்டுக்குள் போகிறார். தங்கராஜ் மீண்டும் ரேவதியிடம் வம்பு இழுக்கிறார். ரேவதி, தங்கராஜ் இடம் சண்டை போட்டுவிட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த பாக்கியராஜ், மலரிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதோடு கடன் கொடுத்தவர் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு போனதால் வீட்டில் சொல்லாமல் மறைக்கிறார்.

சீரியல் ட்ராக்:
மலர், தன் கணவர் பிரச்சனையில் இருப்பதை புரிந்து கொண்டு விசாரிக்கிறார். பாக்கியராஜ் உண்மையை சொல்லிவிடுகிறார். பின் மலர், தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து வண்டியை மீட்க சொல்கிறார். பாக்கியராஜ் வேண்டாம் என்று மறுக்கிறார். இருந்தாலும் மலர் கட்டாயப்படுத்தியதால் பாக்கியராஜ் பணத்தை வாங்கிக் கொள்கிறார். அதற்கு பின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல மதி, தேவையில்லாத பொருட்களை தட்டில் வையுங்கள் என்று சொல்கிறார்.இதனால் மாமியார் மாமனார் எல்லோருமே மதி இடம் சண்டை போடுகிறார்கள்.






