விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கார்த்திகேயன், தன்னுடைய புது பொருட்களை எல்லாம் மீண்டும் பாண்டியன் கடைக்கு கொண்டு வந்து வைத்தார். அந்த சமயம் பார்த்து அரசி அங்கு வந்தார். அரசி இடம் சகஜமாக கார்த்திகேயன் பேசினார். பின் கார்த்திகேயன் கிளம்பியவுடன் பாண்டியன் விசாரித்தார். அரசி, நடந்ததை சொன்னார். அதற்குப்பின் தங்கமயில், மீனாவிற்கு ஃபோன் செய்து கதிர் விஷயத்தை பற்றி கேட்டு விசாரித்தார். மீனாவுமே நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்குப்பின் மீனா, ஹாஸ்பிடலுக்கு செக்கு போகும் விஷயத்தை கேட்டார். தங்கமயில், ஹாஸ்பிடலுக்கு போகணும். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதை எல்லாம் கோமதி கேட்டு விட்டார்.

கோமதி, ஹாஸ்பிடழுக்கு தங்கமயில் உடன் யாருமே செல்லவில்லையா? என்றார். மீனா, யாரும் போகவில்லை. தங்க மயில் அக்கா மட்டும் தான் தனியாக போகிறார் என்றார். இன்னொரு பக்கம் சரவணன், அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அஞ்சலி, நான் உன் வாழ்க்கையில் வந்ததால் உனக்கு தான் நிறைய பிரச்சினை. நாம் இனி பேசிக்கொள்ள வேண்டாம் என்றார். சரவணன், என்னுடைய வாழ்க்கை உன்னுடன் தான். நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றெல்லாம் சொன்னார். இருந்தாலுமே அஞ்சலி மனம் மாறவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நீ உன்னுடைய குழந்தை குடும்பத்துடன் சந்தோஷமாக இரு என்று அழுது கொண்டே அங்கிருந்து சென்றார். அஞ்சலி சொன்ன வார்த்தையால் சரவணன் ரொம்பவே கஷ்டத்தில் இருந்தார். அதற்குப்பின் முத்துவேலை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். குமார், முத்துவேல் காலில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்டார்.

பழனி, காந்திமதி எல்லோருமே குமாரை திட்டிக் கொண்டிருந்தார்கள். முத்துவேல், குமாரை மன்னிக்காமல் அங்கிருந்து உதாசனைப் படுத்தி சென்றார். அதற்குப்பின் துக்கம் தாங்க முடியாமல் சரவணன் நிறைய குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதை அறிந்த கோமதி சண்டை போட்டார். பாண்டியனும் கோபப்பட்டு திட்டிக் கொண்டிருந்தார். ஆனால், சரவணன் எதுவுமே கண்டுகொள்ளாமல் ரூமுக்குள் சென்று விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர்- ராஜி இருவரும் வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த பக்கம் வந்த குமார் கதிரை பார்த்து சண்டை வாங்குகிறார். கோபத்தில் ராஜி, குமாரிடம் சண்டைக்கு போகிறார்.உடனே கதிர், ராஜியை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து வருகிறார். அதற்குப்பின் தங்கமயில் செக்கப்பிற்காக ஹாஸ்பிடலுக்கு போகிறார். தங்க மயிலை செக் பண்ணுகிறார்கள். அப்போது நர்ஸ், உன்னுடன் யாரும் வரவில்லையா? என்று கேட்கிறார். உடனே கோமதி, நான் இருக்கிறேன் என்று சொல்கிறார். கோமதியை பார்த்தவுடன் தங்கமயில் ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் டாக்டர் தங்கமயிலை செக் பண்ணுகிறார். கோமதி, குழந்தையை பற்றியும் தங்கமயில் பற்றியும் நலம் விசாரிக்கிறார். தங்கமயிலுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. பின் இதை பற்றி எல்லாம் தங்கமயில் மீனாவிடம் போன் செய்து சொல்கிறார். அதன் பின் செந்திலுக்கு போன் செய்த மீனா, கோமதி ஹாஸ்பிடலுக்கு சென்ற விஷயத்தை எல்லாம் சொல்லி பெருமைப்படுகிறார். செந்திலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்






