நடிகைகளுக்கு இணையாக மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட். அசத்தும் ஜெயம் ரவியின் மனைவி.

0
89076
aarti
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக தூள் கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் தந்தை மோகன் திரைப்பட எடிட்டர் என்பதும், மோகனின் மனைவியின் பெயர் வரலக்ஷ்மி என்பதும் தெரியும். 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும் சகோதரன் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் ரவி சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரவி நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

-விளம்பரம்-

இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, எங்கேயும் காதல், நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனிஒருவன் என்று பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. கடந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. மேலும், ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அரவிந்த் சாமியின் எம் ஜி ஆர் கெட்டப்பிற்கு இணையாக ஜெயலலிதா கெட்டப்பில் மாறியுள்ள நடிகை.

இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் டிக் டிக் டிக். இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனான ஆரவ்வும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவிக்கு இரண்டாவது மகன் இருக்கிறார் என்பது பல பேர் அறிந்திடாத ஒன்று. அவருடைய பெயர் அயான்.

-விளம்பரம்-
View this post on Instagram

Actor #jayamravi Wife #Aarti Dazzling Look

A post shared by Behind Talkies (@behindtalkies) on

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அடிக்கடி தனது புகைப்படங்களை பதவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் ஆர்த்தி, கதாநாயகிகளுக்கு இணையாக மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement