அரவிந்த் சாமியின் எம் ஜி ஆர் கெட்டப்பிற்கு இணையாக ஜெயலலிதா கெட்டப்பில் மாறியுள்ள நடிகை.

0
4241
aravind-swamy
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெ. ஜெயலலிதா. ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக கொடி கட்டி பறந்தவர் நடிகை ஜெயலலிதா. பின்னர் சிறு வயதிலேயே அரசியலில் நுழைந்து தமிழக முதல்வர் ஆனார். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் அரசியலிலும் சிங்கப்பெண் போலவே பெரும் ஆளுமை செய்தார். ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு கூட இந்தியாவில் மூன்றாம் கட்சியாக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகின்றனர்.

-விளம்பரம்-

சமிபத்தில் கூட ஜெயலலிதா அம்மாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படமாக “குயின்” என்ற வெப் சீரிஸ் உருவாக்கி இருந்தது. “த ஐயன் லேடி” என்ற தலைப்பில் பிரியதர்ஷினியியும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்கள். இப்படி பல பேர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தலைவி. இந்த படத்தில் ஜெ. ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சந்தானத்தின் மகனை பார்த்திருப்பீங்க அவருடைய மகளை பார்த்துள்ளீர்களா. என்னமா நடிக்கிறாங்க பாருங்க.

மேலும், இந்த படத்தை விப்ரி மீடியா தயாரித்து வருகிறது. இந்த படத்தை பொறுத்தவரை ஜெயலலிதாவின் திரை வாழ்க்கையில் ஆரம்பித்து அரசியலில் அவர் நுழைவது வரைக்குமான காட்சிகள் இடம் பெறும் என கூறப்படுகிறது. மேலும், இந்த படம் தமிழ் மற்றும் இந்தி என்று இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. தலைவி படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பின் அரவிந்த் சாமியின் நடன வீடியோவும் வெளியாகியிருந்தது. இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பல எதிர்ப்பார்ப்புடன் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for gangana ranavat thalaivi secnd look

இந்நிலையில் ஜெயலலிதா இளம் வயது இருக்கும் புகைப்படத்தை போலவே நடிகை கங்கணா ரணாவத் உள்ளார். தற்போது கங்கணா ரணாவத் அவர்கள் ஜெயலலிதா போல் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அச்சு அசலாக நடிகை கங்கணா ரணாவத் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் போலவே உள்ளார் என்று பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், நாளுக்கு நாள் தலைவி படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Advertisement