பிலாசபி வசனத்த ஜீவா குரல்லே கேக்கறதே வேற லெவல் தான் – வைரலாகும் farzi பட காட்சி. ஜீவா குரலுக்கு குவியும் பாராட்டு.

0
1688
jeeva
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவர் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின்னர் தொடர்ந்து ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, ரௌத்திரம், நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.தனது முதல் படத்தில் ஒரு காதல் ஹீரோவாக நடித்த ஜீவா அதன் பின்னர் நடித்த “ராம், டிஷ்யூம்” போன்ற படங்களில் தனது அபார நடிப்பு திறமையை கட்டியிருந்தார்.

-விளம்பரம்-

ஒரு சில பல படங்கள் பெரும்பாலும் இவருக்கு தோல்வியிலேயே முடிந்தது. சரியான கதை தேர்வு செய்யும் திறமை ஜீவாவிடம் குறைந்த்தால் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பல படங்களும் பிலாப்பானது. இறுதியாக தற்போது கதையை தேர்வு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் நடிகர் ஜீவா. இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கபிர் கான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “83”. இந்த படம் முழுக்க முழுக்க இந்திய கிரிக்கெட் விளையாட்டை கொண்ட கதையில் ஜீவா நடித்திருந்தார்.

- Advertisement -

ஸ்ரீகாந்தாக ஜீவா :

இந்த படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கைப் பயணத்தையும், அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆனதும், 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதும் பற்றிய கதை. மேலும் இந்த கதையில் தமிழ் நாட்டு கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் ஆக ஜீவா நடித்திருந்தார். ஆனால் இந்த படம் அவ்வளவு பெரிதாக பெற்றியடையவில்லை.

படங்கள் :

இப்படத்தை தொடர்ந்து ஜீவா “காஃபி வித் காதல்” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜெய் ஸ்ரீகாந்த் மாளவிகா ஷர்மா, dd, யோகிபாபு, ஆர்யா, வி டிவி கணேஷ் போன்ற பலர் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அதற்கு பிறகு நித்தம் ஒரு வானம், வரலாறு முக்கியம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது “கோல்மால்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

Farzi படத்தில் டப்பிங் :

நடிகர் ஜீவா ஒரு நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டும் ஆவார். மேலும் சில பாடல்களையும் பாடியுள்ளார். ஜீவா நடித்த 83 படத்தில் கூட இவரின் குரலுக்கு சிறப்பான வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது இவர் டப்பிங் கொடுத்திருக்கும் “farzi” என்ற இனைய தொடர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த இனைய தொடரில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் கதாநாயகனாக, விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருத்தனர். ஹிந்தி மொழியில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நெட்டிசன்கள் பாராட்டு :

இந்த நிலையில் இப்படத்தில் தமிழ் மொழியில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருக்கு நடிகர் ஜீவா தமிழில் டப்பிங் செய்துள்ளார். பொதுவாக ஜீவா சென்டிமென்ட காட்சிகளில் அற்புதமான நடிகராக இருக்கையில் farzi தொடரில் வரும் ஒரு செண்டிமெண்ட் காட்சியில் ஜீவா கொடுத்திருக்கும் டப்பிங் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இவரின் அந்த குரலுக்காகவே farzi படத்தில் வரும் அந்த காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement