கமலஹாசன் பற்றி நடிகர் ஜோஜு ஜார்ஜ் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தற்போது கமல் நடித்த படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டு வருவதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பட குழுவினர் மும்முரமாக பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்திருக்கிறது. இதில் படகுழுவினர் அனைவரும் பங்கு பெற்றிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் பேசிய கமல், எனக்கு ஜோஜு ஜார்ஜ் யார் என்று முதலில் தெரியாது.
கமல் சொன்ன வார்த்தை:
அவருடைய இரட்டா என்ற படத்தை பார்க்க சொன்னார்கள். அதை பார்த்து நான் வியந்து போய் விட்டேன். காரணம், நான் 30-க்கும் மேற்பட்ட படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், அந்த படத்தைப் பொறுத்தவரை ஜோஜு ஜார்ஜ் ரொம்ப சிறப்பாக நடித்திருந்தார். ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நடக்கும் கதையாக தான் இருக்காது இருக்கும். ஆனால், இரண்டு கேரட்டருக்குமே வித்தியாசம் தெரியும். படம் பார்க்கும்போது இரட்டை வித்தியாசம் கண்டுபிடித்து விடலாம். அதனை பார்த்து நான் ரொம்ப ஜோஜு ஜார்ஜ் மீது பொறாமை பட்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி கமல் பேசுவதை கேட்டு ஜோஜு ஜார்ஜ் கண்கலங்கி இருந்தார்.

ஜோஜு ஜார்ஜ் பதிவு:
மேலும், இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ரொம்ப நன்றி கமல் சார். என்னுடைய கனவு நினைவாகிவிட்டது என்ற உணர்வு ஏற்படுகிறது. எனக்கு மிகப்பெரிய விருதுகள் வாங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. என்னுடைய நடிப்பு குறித்த உங்களுடைய வார்த்தைகளும் பாராட்டுகளும் என்னை ஆஸ்கர் வாங்கிய மனநிலைக்கு தள்ளியிருக்கிறது. நீங்கள் மாபெரும் நடிகர். எங்களின் உலகளாவிய ரோல் மாடல். நான் உங்களின் தீவிர ரசிகன், நல்ல சீடன். நடிப்பில் உங்களின் ஒவ்வொரு நிமிட செய்திகளையும் தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தோம். உங்களிடம் இருந்து வந்த பாராட்டு தான் எனக்கான ஆஸ்கர்.
https://www.youtube.com/watch?v=9uHqwYF0v_U
கமல் பற்றி சொன்னது:
என் கதாபாத்திரம் மிகச் சரியாக வரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறேன். என் துறையை சேர்ந்தவர்கள் என் உழைப்பை பார்த்து பாராட்டி பேச வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பேன். ஆனால், என் துறையை சேர்ந்த சிலரிடம் இருந்து தான் சில கதாபாத்திரங்களுக்கும், சில படங்களுக்கும், இந்த மாதிரியான பாராட்டுகள் வந்திருக்கிறது. பல செலிபிரிட்டிகள் என்னுடைய பட போஸ்டர் அவர்களை பகிர்ந்து கொள்வதற்கு கூட நான் சிரமப்பட்டு இருக்கிறேன். பல தருணங்களில் நான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். பல ஊடகங்களும் என்னுடன் வேலை செய்தவர்களுமே என்னை மோசமாக காயப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், இன்று கமல் சார் இடம் இருந்து பாராட்டுகளை பெற்றதால் நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
சினிமா அனுபவம்:
என்னை பொறுத்தவரையும் ஜோசப் படம் எனக்கு மகிழ்ச்சியை தந்தது. இந்த பாராட்டுக்கு பிறகு இனி என் வாழ்வில் நான் செய்யப் போவதெல்லாம் வெறும் போனஸ் தான். ஒரு மனிதனாக கமல் சாரின் வார்த்தைகளால் நான் முழு திருப்தி அடைந்து விட்டேன். சிம்பு, மணி போன்றவருடைய வார்த்தைகளால் நான் மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் இருந்தேன். தக் லைப் படத்தில் பணியாற்றுவது நல்ல நினைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பாராட்டுகளை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன். மணி சார் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தையும் உங்களுடன் பணியாற்றுவதற்கான அற்புதமான வாய்ப்பையும் வழங்கியதற்கு நன்றி. நான் சினிமாவை நம்புகிறேன். என்னுடைய பயணம் தொடர்கிறது. அனைவருக்கும் நன்றி கடவுளுக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.






