பிரபல நடிகர் காளி வெங்கட் வாழ்க்கையில் நடந்த சுப நிகழ்வு..!என்னனு பாருங்கள்..!

0
164
kaalivenkat

தமிழ் சினிமாவில் இருக்கும் சிறந்த காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் காளி வெங்கட். ‘இறுதிச்சுற்று, மிருதன், கொடி’ , ‘மெர்சல்’எனப் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் ஆவார்.

kaalivenkatwife

தமிழில் 2010 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான வா கோட்டர் கட்டிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் காளி வெங்கட். அதன் பின்னர் எண்ணற்ற படங்களில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

நடிகர் காளி வெங்கட்டிற்கு ஜனனி என்ற பெண்ணுடன் அவர்களது பெற்றோர்கள் கடந்த ஆண்டு திருமணம் ஏற்பாடுகளை செய்தனர். அதன் படி கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் திருமணம் நடந்தது.

திரையுலகில் காளி வெங்கட்டுக்கு நெருக்கமானவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.இந்நிலையில் நடிகர் காளி வெங்கட்- ஜனனி தம்பதியருக்கு நேற்று (டிசம்பர் 3)காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமென்று காளி வெங்கட் தெரிவித்துள்ளார்.