கார்த்தியின் நிச்சயதார்த்த புகைப்பங்கள். கார்த்தி எப்படி வெக்கபடுறார் பாருங்களேன்.

0
36779
karthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்திக். நடிகர் கார்த்தி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு MS டிகிரிக்காக அமெரிக்காவிற்கு சென்று படித்தார். இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என்பது தான் ஆசை. கார்த்தி அவர்கள் முதன் முதலாக பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் தான் உதவி இயக்குனராக பணி புரிந்தார். பின் இவர் இயக்குனர் அமீரின் இயக்கத்தில் வெளிவந்த “பருத்திவீரன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. அதன் பின் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் நடித்தார். அதிலும் கார்த்திக்கு மிக பெரிய வெற்றி கிடைத்தது. இதனை தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தோழா, காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : படத்தில் மட்டும் அட்வைஸ் கிடையாது, நிஜத்திலும் ஹீரோ என்று நிரூபித்த சசி குமார்.

- Advertisement -

கார்த்திக் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் தனது அண்ணியுடன் சேர்ந்து தம்பி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

Karthi Engagement

கார்த்தி அவர்கள் 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் அவர்கள் முதன் முதலாக தனது மனைவியை பெண் பார்க்க சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் எல்லாம் கார்த்திக், ரஞ்சனி நிச்சயதார்த்த புகைப்படங்கள்.

இதையும் பாருங்க :கோரோனா புண்ணியத்துல கடந்த 15 நாளா முழுநேர விவசாயியா மாறிட்டேன்-பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.

-விளம்பரம்-

அந்த புகைப்படத்தில் மாப்பிளை வெட்கத்தை பாருங்களேன் என்று நெட்டிசன்கள் கமெண்டு செய்து வருகிறார்கள். இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. தற்போது நடிகர் கார்த்திக் அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கருப்பு வெள்ளை ராஜா. இந்த படத்தில் கார்த்தி, விஷால் கிருஷ்ணா, சாயிஷா சைகல் நடிக்கிறார்கள். இந்த படம் காதல் நகைச்சுவை படமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

Advertisement