கோரோனா புண்ணியத்துல கடந்த 15 நாளா முழுநேர விவசாயியா மாறிட்டேன்-பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.

0
3260
pandian stores
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.

-விளம்பரம்-

இது வெள்ளித்திரைக்கு மற்றும் இன்றி சின்னத்திரைக்கும் பொருந்தும். சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. பிரியா தம்பி கதை – திரைக்கதை – வசனம் எழுதியுள்ள இந்த சீரியலை இயக்குநர் சிவா சேகர் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது.

- Advertisement -

இச்சீரியலில் குடும்பத்தின் மூத்த மகனாக வலம் வருபவர் நடிகர் ஸ்டாலின். மளிகைக் கடை நடத்தும் பொறுப்பான அண்ணன் கதாபாத்திரம் நடிகர் ஸ்டாலினுக்கு. ஏற்கனவே, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ (சீசன் 1), ‘ஆண்டாள் அழகர்’ மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான ‘பாசமலர்’ போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார் ஸ்டாலின். இவர் பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stalin (Actor) Profile with Age, Bio, Photos and Videos

நடிகர் ஸ்டாலினுடைய சொந்த ஊர் தேனியாம். ஷூட்டிங் டைமில் மட்டுமே இவர் சென்னையில் தங்குவாராம். மற்ற நாட்களில் சொந்த ஊருக்கு சென்று விடுவாராம் ஸ்டாலின். ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் ஊரில் இருக்கும் ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றில் “கொரோனா வருவதற்கு முன்பெல்லாம் ஒரு 15 நாட்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு, 16-வது நாள் இங்கு ஊருக்கு வந்து விடுவேன். இங்கு திராட்சை, எழுமிச்சைன்னு விவசாயம் பண்ணிட்டு இருக்கேன். இப்போது கொரோனா வந்ததால், முழுநேர விவசாயியா இங்கயே இருக்கேன்.

-விளம்பரம்-

கொரோனா தொடர்பாக தினமும் வரும் செய்திகளை படிக்கும் போது ரொம்பவும் கவலையா இருக்கு. தினக்கூலிகள் எல்லாம் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில இருந்து மீண்டும் வரனும்னா, அரசாங்கம் சொல்வதை கேட்டு நாம் ஒத்துழைப்பு தர வேண்டும். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்தவர்களிடம் அவ்வபோது வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கிறேன். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை மிஸ் பண்றேன். சீக்கிரமே கொரோனா பிரச்சனை முடிந்து ஷூட்டிங்கிற்கு கிளம்புற நாள் வரும்னு நம்புறேன்” என்று நடிகர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Advertisement