சர்தார் 2 படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கார்த்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ‘பருத்தி வீரன்’ என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு நடிகராக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

அதை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. இதை அடுத்து கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த மெய்யழகன் படமும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.
கார்த்தி குறித்த தகவல்:
இதை அடுத்து தற்போது இவர் நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கைதி 2, வா வாத்தியார், கார்த்திக் 29 போன்ற பல படங்களில் கார்த்தி கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் தற்போது கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் படம் சர்தார் 2. ஏற்கனவே சர்தார் முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.

சர்தார் 2 படம்:
இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அத்டவு கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக சர்தார் அமைந்தது. தற்போது இந்த இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த ராசி கண்ணா, ரஷியா விஜயன், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், முனீஷ்காந்த், அவினாஷ், யூகி சேது ஆகியோருடன் எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் முதல் பாகத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

படம் குறித்த தகவல்:
தற்போது இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சில தினங்களாகவே மைசூரில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இங்கு சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார்த்தி காலில் அடிபட்டு இருக்கிறது. இதனால் படக்குழு அவரை உடனடியாகவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர், கார்த்தி ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=LODtiixQ5cM
கார்த்தி ஏற்பட்ட விபத்து:
இதன் காரணமாக சர்தார் 2 படத்தினுடைய படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. படக் குழுவினரும் எல்லோருமே சென்னைக்கு திரும்பி இருக்கிறார்கள். தற்போது கார்த்தி தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கிறார். தற்போது சர்தார் படத்தின் படபிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்து இருக்கிறது. கார்த்தியின் உடல்நிலை சரியான உடன் மீண்டும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடரும் என்று படக்குழு கூறி இருக்கிறார்கள். ஏற்கனவே சர்தார் 2 படப்பிடிப்பில் ஸ்டன்ட் கலைஞரான ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து அநியாயமாக உயிர் இழந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.






