ரவிமோகன் தயாரிப்பு விழாவில் நடிகர் கார்த்தி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் காதலிக்க நேரமில்லை.

இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்தார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் நித்யா மேனன், ஜெயம் ரவி, வினய், யோகி பாபு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருந்தார். இந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதை அடுத்து இவர் தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
ரவிமோகன் திரைப்பயணம்:
இந்தப் படத்தை ‘Dawn Pictures and Red Gaint movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் ஜீனி, கராத்தே பாபு போன்ற படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அதோடு இன்னும் சில படங்களில் ரவி கமிட்டாகி இருக்கிறார். தற்போது நடிகர் ரவி மோகன் அவர்கள் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம்:
அதாவது, இன்று 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். சென்னையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உடைய தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியிருந்தார்கள். மேலும், இதில் இவர் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கும் படத்தை தான் முதலாக தயாரிக்கிறார். இதை சில நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். இந்த படத்திற்கு ப்ரோ கோட் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். இரண்டாவது படத்தை ரவி மோகன் இயக்குகிறார். அந்த படத்தில் யோகி பாபு தான் நடிக்கிறார். இரண்டு படங்களுக்குமான பூஜையுமே இந்த நிகழ்வில் போடப்பட்டது.

விழாவில் கார்த்தி:
அப்போது விழாவில் பேசிய கார்த்தி, தயாரிப்பாளராக அவர் அறிமுகமாகிறார் என்று தெரிந்ததுமே நண்பனாக நான் அவனை தொடர்பு கொண்டு அனைத்தையும் விசாரித்தேன். தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரிப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. நிறைய கஷ்டங்கள் இருக்கிறது. அவருடைய திறனுமே எனக்கு தெரியும். ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது இவ்வளவு பெரிய நிகழ்வாக இதுவரை யாருமே செய்தது கிடையாது. அவருக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் வெற்றிகரமானதாக அமைய வேண்டும். நான் சினிமாவுக்குள் வரணும்னு ஆசைப்பட்ட சமயத்தில் ரவி அண்ணா டான்ஸ் கிளாஸில் இருப்பார்.
https://www.youtube.com/watch?v=WzVK7yR8wgE
ரவி பற்றி சொன்னது:
நாங்க மூணு அடி ஜம்ப் பண்ணினால் அவர் உயரமான லெவலுக்கு ஜம்ப் செய்வார். அப்போ இவர்கள் இருக்கிற சினிமாவுக்கு தான் வரப்போகிறோம் என்று கொஞ்சம் பயமாக இருந்தது. அப்புறம் ரவி அண்ணா எங்களை கூட்டிக்கொண்டு ஜூஸ் எல்லாம் வாங்கி தருவார். நாங்கள் ஜூஸுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார். அதற்கு பிறகு தான் அவர் என்னை விட சின்ன பையன் என்று தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் அண்ணன் ரவியாக கூப்பிட ஆரம்பித்தேன். யாருக்கும் கெடுதல் நினைக்காத நபர் தான் ரவி. அவராலையும் அப்படி நினைக்க முடியாது. ரவிக்கு சினிமா பற்றி ஆழமாக நிறைய விஷயங்கள் தெரியும். படிக்கவே இல்லைன்னு சொல்லிவிட்டு நல்ல மதிப்பெண் வாங்குபவர்கள் மாதிரி தான் ரவியும் இருப்பான் என்று பேசியிருந்தார்.






