சீரியலில் நடிக்கிறாரா நடிகர் கார்த்தி.? அவரே பதிவிட்ட ட்வீட்.!

0
649
Karthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இதுவரை பல தரமான படங்களைக் கொடுத்திருக்கிறார். அதுவும் தமிழ் சினிமாவில் வெவ்வேறு இயக்குனரை வைத்து படத்தில் நடித்த ஒரே நடிகர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இதுவரை நடிகர் கார்த்திக் 17 படங்களில் நடித்துள்ளார் அந்த 17 படங்களுக்கும் வெவ்வேறு இயக்குனர்கள் தான். கார்த்திக்கின் பெரும்பாலும் படங்கள் ஹிட் இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த தேவ் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. தற்போது கைதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : தனது அண்ணியுடன் கார்த்திக் நடிக்கும் முதல் படம்.! வெளியான சுவாரசிய தகவல்.! 

- Advertisement -

அந்தப் படத்தை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நடிகர் கார்த்திக் சீரியலில் நடிக்கப் போவதாகவும் சில செய்திகள் வெளியாக இருந்தது. அதற்கேற்றார்போல நடிகர் கார்த்திக்கும் ஒரு சீரியல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் விரைவில் ‘தறி’ என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தகவலை நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால், இந்த தொடரில் கார்த்திக் நடிக்கவில்லை. இந்த தொடரை பிரகாஷ்ராஜின் முதல் மனைவி லலிதாகுமாரி தயாரிக்க இருக்கிறார். நடிகர் கார்த்தி பிரகாஷ்ராஜின் நண்பர் என்பதால் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement