சமீபத்தில் உண்மை போலீஸ் கதையாக திரைக்கு வந்து பெரிய ஹிட் ஆன படம் தீரன். தமிழகத்தில் கொலை கொள்ளை செய்து தப்பி செல்லும் ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிப்பது தான் கதை.
அதே போல், தமிழகத்தில் கைவரிசை காட்டி ராஜஸ்தானுக்கு தப்பி சென்று விட்டது நாதுராம் என்ற கொள்ளையனின் தலைமையிலாக திருட்டு கும்பல். இவர்களை பிடிக்க சென்னை மதுரவாயல் துணை ஆய்வாளர் பெரிய பாண்டியன் தலைமையிலான தனிப்படை அங்கு சென்றது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக சப் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுட்டு கொன்றுவிட்டான் நாதுராம் என்ற கொள்ளைக்காரன். இதனால், அவரது உடல் நேற்று அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அவருடைய உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். அதே போல், தீரன் படத்தில் நடித்த கார்த்தி ‘ரியல்’ தீரன் பெரிய பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தினார் .அவர் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதலும் கூறி வந்தார் கார்த்திக்.