கெளதம் கார்த்திக் மட்டும் தான தெரியும், கார்த்தியோடு மற்ற மகன்களை பார்த்துக்கீறீங்களா.

0
7373
karthik
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். இவரின் நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தமிழ் சினிமா உலகில் இன்றும் நவரச நாயகனாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் கார்த்திக். மேலும், இவர் நடிகர் முத்துராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் கார்த்திக்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்த தோடு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார். பின் சில காலம் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் கார்த்திக் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அனைவரும் அறிந்த ஒன்று. கார்த்திக் அவர்கள் உடற்பயிற்சி செய்யும் போது அவருக்கு உடலில் அடிபட்டது. இதனால் தான் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் கார்த்திக் அவர்களின் மகன் கௌதம் கார்த்திக் அவர்கள் தற்போது தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

அம்மா, தம்பியுடன் கவுதம் கார்த்திக் பிறந்தநாள் கொண்டாட்டம் - Gautham karthik  celebrated his birthday with mom and brother

மேலும், பிறந்தநாளை கொண்டாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் கௌதம் கார்த்திக் அவர்கள் தனது அம்மா மற்றும் இரண்டு தம்பிகளுடன் உள்ளார். இதைப் பார்த்த பலரும் நவரச நாயகன் கார்த்திக்கு இவ்வளவு அழகான குடும்பம்மா! என்று சோசியல் மீடியாவில் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். கார்த்திக் அவர்களின் மகன் கௌதம் கார்த்திக்கும் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement