நிதி கொடுத்த விஜய், கிண்டலடிக்கும் விதமாக ட்வீட் செய்துவிட்டு பின்னர் அதை நீக்கிய கருணாகரன்.

0
4260
karunakaran
- Advertisement -

கொரோனாவினால் இந்தியா முழுவதும் பலர் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து ஒரு வேளை சோற்றுக்காக அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவினால் ஒட்டுமொத்த கதிகலங்கி போய் உள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய உலகமே போராடி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் 24056 பேர் பாதிக்கப்பட்டும், 775 பேர் பலியாகியும் உள்ளனர். அதே போல் தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து உள்ளார் பிரதமர் மோடி. ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து, கடைகள், மக்களின் பொழுதுபோக்கு இடங்கள், மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-
karunakaran-cheap-tweet

கொரோனவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர், கூலி வேலை செய்பவர்கள் என பலர் தங்களின் வாழ்வாதரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் விஜய் கொடுத்த நிதியை குறித்து பிரபல நடிகர் கருணாகரன் அவர்கள் கிண்டலடித்து டீவ்ட் போட்டு உள்ளார்.

இதையும் பாருங்க : சுரபியை அடுத்து பில்லோ சவாலை ஏற்ற தமன்னா. தரையில் படுத்தபடி கொடுத்த போஸை பாருங்க.

- Advertisement -

தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் விஜய் அவர்கள் ரூ. 1.30 கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியுள்ளார். முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கு 25 லட்சமும், கேரளாவுக்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா 5 லட்சமும் நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு விஜய் ரசிகர்கள் தலா 5,000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்கள். தளபதி விஜய் அவர்களின் நிதியுதவி செயலை பார்த்து பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். மேலும், தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவி செய்த ஒரே நடிகர் என்ற பெயரையும் பெற்றவர் தளபதி விஜய் தான். இதனால் அனைத்து மாநில முதலமைச்சர்களும் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட பாண்டிச்சேரிக்கு தளபதி விஜய் அவர்கள் ஐந்து லட்சம் ரூபாய் அனுப்பியதை குறித்து பாண்டிச்சேரி முதல்-அமைச்சர் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : இந்த பாட்ல காஜல் முத்தம் கொடுக்கும் முன், முத்தம் கொடுத்த பின்- இந்த தவற நோட் செஞ்சீங்களா ?

-விளம்பரம்-

அதில் அவர் விஜயை போல அனைத்து நடிகர்களும் இதுபோன்ற உதவ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் விஜய்யின் இந்த செயல் குறித்து நடிகர் கருணாகரன் அவர்கள் டீவ்ட் ஒன்று பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, விஜய் போல் சம்பளம் கொடுங்கள். நாங்களும் செய்கிறோம் என்பதைப் போல தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்து விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களும் கோபம் அடைந்து தாறுமாறாக கருணாகரனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இருபத்தைந்து வருடமாக சினிமாவில் போராடி கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்த விஜய்யை இப்படி விமர்சிப்பது சரியில்லை என்று ரசிகர்கள் கருணாகரனை வெளுத்து வாங்கி வருகின்றனர். ஆனால், அந்த டீவீட்டை நீக்கி உள்ளார் கருணாகரன். சமீபத்தில் கூட இதே போன்று கருணாகரன் அவர்கள் சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறிய பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் டீவ்ட் போட்டு இருந்தார். அதை பார்த்து கடும் கோபம் ஆன விஜய் ரசிகர்கள் எல்லாம் கருணாகரன் குறித்து தாறுமாறாக ஹாஸ்டேக்குகளை உருவாக்கி கிழி கிழி என்று கிழித்தனர். அதற்கு கருணாகரனும் விஜய் ரசிகர்கள் இடம் மன்னிப்பு கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement