இந்த பாட்ல காஜல் முத்தம் கொடுக்கும் முன், முத்தம் கொடுத்த பின்- இந்த தவற நோட் செஞ்சீங்களா ?

0
49602
karthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கார்த்தி அவர்கள் 2007-ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளி வந்த ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமாயி இருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-
காஜலிடம் கார்த்தி அடம் பிடிக்கும் போதே இந்த இரண்டு நபர்கள் முன்னாள் நடந்து வருகிறார்கள்

இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அவர்கள் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆ ல் அழகு ராஜா, பிரியாணி, மெட்ராஸ், தோழா, காஷ்மோரா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ் என பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், நடிகர் கார்த்திக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இதையும் பாருங்க : இன்றிலிருந்து செய்திகளில் வர மாட்டேன். ஆனால், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் எடுத்த அதிரடி முடிவு.

- Advertisement -

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அவர்கள் தன் அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து தம்பி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

முத்தம் கொடுக்கும் போது மீண்டும் அதே நபர்கள் பின்னால் நடந்து வருகின்றார்கள்

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் கார்த்திக் நடித்த ஒரு படத்தின் காட்சி குறித்து தான் கிண்டல்,கேலியும் எழுந்து உள்ளது. அது கார்த்திக் நடிப்பில் வெளிவந்த நான் மகான் அல்ல படம் தான். 2010 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நான் மகான் அல்ல. இந்த படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் கண்ணோடு காதல் வந்தால் என்ற பாடலில் இடம் பெற்ற ஒரு சீன் தான் இந்த புகைப்படம். இந்த பாடலின் நடுவே கார்த்தி மற்றும் காஜல் இருவரும் ஒரு நடை பாதையில் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பார்கள். அப்போது பாதசாரிகள் ஒரு சிலர் நடந்து செல்வார்கள். அப்போது கார்த்தி காஜலுக்கு முத்தம் கொடுக்கும் போது அவர் நிராகரித்து விடுவார். இதனால் கோபித்துக் கொள்ளும் கார்த்தி அந்த இடத்தைவிட்டு வராமல் அடம் பிடித்துக் கொண்டு இருப்பார்.

இதையும் பாருங்க : லாக் டவுன் : ரஜினி பட ஹீரோயின் வீட்டில் பார்ட்டி? போலீஸார் அதிரடி சோதனை. புகார் அளித்த வாட்சமேனிடம் வாக்கு வாதம்.

அவரை சமாதானம் செய்ய காஜல், அவருக்கு முத்தம் கொடுப்பார். இந்த காட்சியில் நடந்து செல்லும் இந்த குறிப்பிட்ட இருவரும் காஜல் அகர்வால் கார்த்திக்கு முத்தம் கொடுப்பதற்கு முன்பாகவே அவர்களை கடந்து சென்று விடுவார்கள். ஆனால், கார்த்திக்கு முத்தம் கொடுக்கும் போதும் அதே நபர்கள் மீண்டும் கார்த்தி மற்றும் காஜலலுக்கு பின்னாலிருந்து நடந்து வருவார்கள்

Advertisement