மெர்சல் டைட்டில் பிரச்சனைக்கு காரணம் இந்த அரசியல் நடிகர் தானா..!

0
1771
Mersal

விஜய்–அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் தீபாவளிக்கு வெளியாக இருந்த படம் மெர்சல்.இந்தப்படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம். விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளளார். தீபாவளிக்கு இந்த படம் வெளியாகயிருப்பதால் தற்போது இறுதிகட்ட பணிகள் முடிந்துவிட்டது.அதோடு,நேற்று முன்தினம் மெர்சல் படத்தின் டீசர் வெளியாகி, உலகசாதனை நிகழ்த்தியது.
mersalஇந்த நேரத்தில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர், ஏற்கனவே தான் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் ஒரு தலைப்பை 2014-லேயே பதிவு செய்திருப்பதோடு, அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறியதுடன், மெர்சல் தலைப்புக்கு தடைகோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த நீதிபதி அக்டோபர் 3-ந்தேதி வரை விளம்பரங்களில் மெர்சல் என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதித்திருப்பதோடு, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மெர்சல் பட டைட்டில் விவகாரம் ஸ்மூத்தாக முடியுமா? என்றால் டவுட்தான் என்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்தால், பெரிய பெரிய அதிர்ச்சிகள் வரிசை கட்டி நிற்கும் போலிருக்கிறது.

இதையும் படிங்க: மாறுகிறதா மெர்சல் டைட்டில்? புதிய டைட்டில் இது தானா ?

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் ஏ.ஆர்.ராஜேந்திரன் என்பவர், ‘மெரசாலாயிட்டேன்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை துவங்குவதாக திட்டமிட்டிருந்ததாக கூறியிருக்கிறார். விஜய் படத்திற்கு மெர்சல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் தன்னால் இப்போது படத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குமுறியிருக்கிறார்.
vijay

இந்த தலைப்பை பற்றிய விபரங்களை தேட ஆரம்பித்த நமக்கு, ஒரு சினிமா விளம்பர போஸ்டர் மட்டும் கண்ணில் சிக்கியது.அதில் நடிகர் கருணாசுக்கு சொந்தமான கென் மீடியா நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ‘கென் மீடியா கருணாஸ் பிரசன்ஸ்’ என்று கொட்டை எழுத்தில் உருவாக்கப்பட்டுள்ள விளம்பரம், எந்தளவுக்கு மக்களை சென்றடைந்ததோ தெரியாது. ஆனால் இந்த தலைப்பு விவகாரத்தில், விஜய்க்கு எதிராக கருணாஸ் இருக்கிறாரோ என்கிற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது.
Related image
அப்படியே கருணாஸ் அவர்களை பின்தொடர்ந்தால் அது நேரடியாக அரசியலுக்குள் புகுந்து விடும்.இப்போதைக்கு இந்த விவகாரத்தில் அக்.3 வரை பொறுமையாக காத்திருப்பதை தவிர வேறு வழியே இல்லை.