விஜய் 63யில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறேன்.!நடிகர் கதிர் பேட்டி.!

0
610
Vijay-63-kathir

தெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மேலும், இந்த படத்தில் நடிகர் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கதிர் இந்த படம் குறித்து பேசுகையில், விஜய் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கூட பழகிய பிறகு, அவருடைய கேரக்டரும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. சிறந்த மனிதர். 

- Advertisement -

அவரை நான் தூரத்தில் இருந்து ஒரு ரசிகராக ரசித்திருக்கிறேன். அவருடன் சேர்ந்து நடிப்பது தற்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை என்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அட்லீ என்னுடைய சிறந்த நண்பர் என்னுடைய வளர்ச்சி பற்றி அடிக்கடி அவர் பேசுவார்.

விஜய் சார் படத்தில் உனக்கு ஒரு முக்கிய ரோல் இருக்கிறது என்று அவர் என்னிடம் சொன்னார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் மொத்த கதையும் என்னுடைய கதாபாத்திரத்தையும் சொன்னார். இந்த படத்தில் எனக்கு ஏதோ ஒரு கதாபத்திரத்தை கொடுக்கவில்லை இந்த படத்தில் எனக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறியுள்ளார் கதிர்.