கிங் காங் மகன பாத்தீங்க அவர் மூத்த மகளை பாத்தீங்களா – அடேங்கப்பா இவருக்கு இவ்ளோ பெரிய மகளா ?

0
1402
kingkong
- Advertisement -

தமிழ் சினிமா உலகின் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர் கிங் காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய உண்மையான பெயர் பாதி பேருக்கு தெரியாது. நடிகர் கிங் காங் உடைய உண்மையான பெயர் ‘சங்கர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றி நடை போட்ட ‘அதிசய பிறவி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகர் கிங் காங் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் கிங் காங் ஆடிய டான்ஸ் இப்போது பார்த்தால் கூட சிரிப்பை அடக்க முடியாது. அந்த அளவிற்கு தூளாக இருந்தது.

-விளம்பரம்-

பிறகு தான் நடிகர் கிங் காங் அவர்களுக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் நிறைய வந்து குவிந்தன. இதுவரை இவர் ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறனால் மக்களிடையே பாராட்டுகளை பெற்றவர். மேலும், இவர் நடித்த படங்களின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றவர்.

- Advertisement -

கிங் காங் செய்த சாதனை:

இவர் அதிகமாக காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு இவரின் காமெடி இருக்கும். மேலும், நடிகர் கிங் காங் அவர்கள் 1990 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார். அதோடு நடிகர் கிங் காங் அவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலை கழக கல்லுரில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருந்தார்கள்.

கிங் காங் குடும்பம்:

இதனைத் தொடர்ந்து சினிமாவில் இவருடைய நடிப்புத் திறனுக்காக தேசிய விருது வழங்கி உள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க இவர் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கிங் காங் தனது மகனுடன் கலந்து விளையாடி இருந்தார். ஆனால், இவருக்கு இன்னும் இரண்டு பெண்கள் உள்ளார்கள். இந்நிலையில் கிங்காங் சங்கர் பற்றி அவருடைய மகள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு எங்க அப்பாவ தான் ரொம்ப பிடிக்கும். அப்பா ரொம்ப ஜாலியாக இருப்பார்.

-விளம்பரம்-

கிங் காங் மகள் அளித்த பேட்டி:

அதனால் எங்க அப்பா ரொம்ப பிடிக்கும். நண்பர்களுடன் எப்படி ஜாலியாக இருக்கிறாரோ, அதே மாதிரி தான் வீட்டிலும் இருப்பார். அப்பா இல்லன்னா எனக்கு ரொம்பவே போர் அடிக்கும். எனக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் என் அப்பா தான். என் முன்னாடியே ‘குள்ளமணி போறான் பாரு’ எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க. அது எனக்கு கஷ்டமாக இருக்கும். ஆனால், அது தான் எங்க அப்பா உடைய பிளஸ் என்று நான் நினைத்தேன். அந்த பிளஸ்ஸில் தான் எங்க அப்பா இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார். நம்ம அப்பா ஏண்டா இவ்வளவு குள்ளமாக இருக்கிறார் என்று என்னைக்குமே நினைத்தது கிடையாது.

என் அப்பாவை இப்படி தான் கூப்பிடுவேன்:

‘டாடு’ என்று தான் எங்க அப்பாவை கூப்பிடுவேன். அதோட என்னுடைய நண்பர்கள் எல்லாம் என்னை பார்க்க வருகிறார்களோ? இல்லையோ? என்னுடைய அப்பாவை தான் பார்க்க வருகிறார்கள். என்னைக்குமே எங்க அப்பா இந்த மாதிரி இருப்பதை நினைத்து நான் வருத்தப்பட்டது கிடையாது. அவர் இப்படி இருப்பது தான் எனக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது என்று கிங்காங் மகள் அவரைப் பற்றி பெருமையாக பேசு இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement