இந்த இரண்டும் அரசியல்வாதிகள் கைகளில் சிக்குவது ஆபத்தானது – ராமர் கோவில் குறித்து கிஷோர் விமர்சனம்

0
149
- Advertisement -

ராமர் கோயில் திறப்பு விழா குறித்து நடிகை கிஷோர் விமர்சித்திருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தி ராமர் கோவில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பிறகு பிரம்மாண்டமாக ராமர் கோவிலை கட்ட பிரதமர் மோடி திட்டமிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

அதன் படி பிரம்மாண்டமாக 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்கே அயோத்தி ராமர் கோயில் குறித்த செய்தி தான். இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமர் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது.

- Advertisement -

அயோத்தி ராமர் கோவில்:

மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் கோயில் கொண்டுள்ளது. இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாகி இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு முழுவதும் காண வருகை தந்துள்ளனர். மேலும், இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது.

கோவில் குறித்த தகவல்:

இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், இந்திய சினிமாவின் பிரபல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்தியா முழுவதும் இந்த நாளை அனைவருமே சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பலரும் பாசிட்டிவாக கருத்து தெரிவித்து வந்தாலும் சிலர் விமர்சித்தும், எதிர்மறையாக குரல் கொடுத்து வருகின்றார்கள்.

-விளம்பரம்-

கிஷோர் பதிவு:

இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவை விமர்சித்து நடிகர் கிஷோர் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர், கோவில்கள் என்பது மன்னர்கள் மற்றும் அரசியலை வைத்து அடக்குவது. இதை நாம் இதுவரை பார்திராத ஒன்று இல்லை. தற்போது நாம் மன்னர்களின் காலத்திற்கு சென்று விட்டதாக உணர்கிறேன். கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து மக்களை அடக்கி வருகின்றார்கள்.

ராமர் கோவில் குறித்த விமர்சனம்:

கோவிலைக் கட்டி அதில் தங்களின் பெயர்களை செதுக்கி வைத்துக் கொள்வது, கோவிலை கட்டிய நபர்களின் கையை வெட்டுவது, தங்களுடைய பெருமைகளை பேசி வானுயிர பேனர் வைத்துக் கொள்வது இதெல்லாம் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும், அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு எடுத்துச் செல்வதும் ரொம்ப ஆபத்தானது. இது நாட்டின் கலாச்சாரத்தின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement