கூலி படத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கும் நிலையில் தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், ஆனால், இடையில் தர்பார், அண்ணாத்தே என்று தொடர் பிளாப் படங்களை கொடுத்து கடந்த சில வருடங்களாக ஹிட் படத்தை கொடுக்க ரஜினி போராடிவந்தார்.
View this post on Instagram
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அதோடு சில வாரங்களுக்கு முன்புதான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வந்தது. அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது.
அந்த போஸ்டரில் ரஜினி தன்னுடைய கைகளில் தங்க கடிகாரம் கை விலங்கு அணிந்திருந்தார். அதோடு இந்த படத்தில் இவர் தாதா வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் வீடியோவில் ரஜினி பேசிய பழைய வசனம் இடம்பெற்று பெரும் வரவேற்பை பெற்றது.
View this post on Instagram
அதோடு இந்த டீசரில் இடம்பெற்ற இசையால் புதிய சர்ச்சையை படக்குழு சந்தித்து உள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தங்கமகன் படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். அந்த இசையை தற்போது ரஜினி நடிக்கும் கூலி படத்திற்கு அனிருத் பயன்படுத்துகிறார். இப்படி இருக்கும் நிலையில் அனிருத் ரஜினியின் படத்தில் பயன்படுத்தியிருப்பதற்கு இளையராஜா அவர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறது.
அதோடு இதற்கான உரிய அனுமதியை பெற வேண்டும், இல்லை என்றால் டீசரில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தனக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி ஒரு நிலையில் காப்பி ரைட் விவகாரம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் விளக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://www.youtube.com/watch?v=aNvqfyRcc6g
மேலும், இது மிகவும் பெரிய விவகாரம் எதனை ஒரு தனி தலைப்பாக பண்ண வேண்டும் என்று அனைத்து உலகத்திற்கும் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் காப்பிரைட் என்பது இன்னமும் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஒரு தனி மனிதனாக போராடிக் கொண்டிருக்கிறார் இளையராஜா. இதனால் காப்பிரைட் உரித்த பின்னணியும் ஆட்டத்தையும் புரியாமல் சமூக வலைதளத்தில் கையில் மொபைல் போன் இருக்கிறவன் எல்லாம் தீர்ப்பை எழுதி விடுவான்.
கூலி படத்திற்கு இளையராஜா காப்பி ரைட் கோரி இருப்பது குறித்து பேசியுள்ள அவர் ' வா வா பக்கம் வா பாடல் அந்த படத்தின் தயாரிப்பாளர்காக நீங்கள் உருவாக்கியது எனவே அந்த பாடலை எப்படி பயன்படுத்தலாம் என்று நோட்டீஸ் அனுப்ப வேண்டியது அந்த தயாரிப்பு நிறுவனம் தான் உங்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் உருவாக்கிய பாடல் என்றாலும் அதற்கான தொகையை நீங்கள் பெற்றுவிட்டீர்கள் அதனால் நீங்கள் எப்படி நோட்டீஸ் அனுப்ப முடியும்' என்று கூறியுள்ளார்.





