‘இனி இவங்களோட எந்த நிகழ்ச்சியிலும் பங்குபெற மாட்டேன்’ – குக்கு வித் கோமாளியில் இருந்து விலகிய நாஞ்சில் விஜயன்.

0
465
- Advertisement -

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் விஜயன் பதிவிட்டு இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பிப்பது தான் விஜய் டிவியுடன் வழக்கம். அந்த வகையில் இந்த சீசன் வரும் 27 ஆம் தேதி படு கோலாகலமாக துவங்கியது . இந்த சீஸனின் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மத்தம்பட்டி ரங்கராஜ் தாமுவுடன் நடுவராக இணைந்து இருக்கிறார். விஜே ரக்சன், மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த சீசனில் ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர். மேலும், ராமர், புகழ், நாஞ்சில் விஜயன், குரேஷி ஆகியோருடன் புது கோமாளிகளும் இணைந்துள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வரும் நாஞ்சில் விஜயன் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர்’ நண்பர்களே, நான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். எனக்கு விஜய் டிவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இனி பாக்ஸ் ஆபீஸ் கம்பெனி தயாரிக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் உங்களின் ஆதரவிற்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

நாஞ்சில் விஜயன் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் இருந்து வருகிறார். என்னதான் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும், அவரை பெரும்பாலும் மற்றவர்கள் கலாய்ப்பது தான் வழக்கமாக வைத்து வருகிறார்கள். அதிலும் இந்த சீசனில் நாஞ்சில் விஜயனை விட அனுபவம் குறைந்த பல கோமாளிகள் இருக்கின்றார்கள். அவர்கள் கூட நான்கில் விஜய்யினை கலாய்த்து இருந்தார்கள்.

ஒருவேளை நாஞ்சில் விஜயன் கொக்கி வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை தயாரித்த Media Meason நிறுவனம் விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற புதிய நிகழ்ச்சியை தயாரித்து இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நடுவராக முன்னாள் குக்கு வித் கோமாளி நடுவர் வெங்கடேஷ் பட் தான் செயல்பட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement