விசு இயக்கத்தில் 1987 – ல் எம் எஸ் பாஸ்கர் அறிமுகமான முதல் படம் இது தான். எப்படி இருக்கார் பாருங்களேன்.

0
38190
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் எம்.எஸ். பாஸ்கரும் ஒருவர். எம் எஸ் பாஸ்கர் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே நாகப்பட்டினத்தில் தான். இவர் இதுவரை 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு தான் எம்எஸ் பாஸ்கர் அவர்கள் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் முதன் முதலாக திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருடைய சிறந்த காமெடி, நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. இவர் தமிழ் சினிமா உலகில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி குரல் கொடுப்பவரும் ஆவார்.

இதையும் பாருங்க : நயன்தாராவை எங்கு பார்த்தாலும் அறைந்துவிடுவேன். பிரபு தேவா மனைவியின் கோபமான பேட்டி.

- Advertisement -

இவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பட்டையை கிளப்பியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான அழகி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, கங்கா யமுனா சரஸ்வதி, செல்வி போன்ற சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் சினிமாவில் முதன் முதலில் கடந்த 1987 ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளிவந்த திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பாண்டியன், எஸ் வி சேகர், நிழல்கள் ரவி, விசு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து எம் எஸ் பாஸ்கர் அவர்கள் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் மக்கள் என் பக்கம் என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது எம்எஸ் பாஸ்கர் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் இது தான் எம்எஸ் பாஸ்கரா!! என்று வியந்து கேட்டுள்ளார்கள்.

இதையும் பாருங்க : வறுமையால் கஷ்டப்பட்டு வந்த பில்லா 2 பட நடிகரின் தற்போதைய நிலை. அவரே வெளியிட்ட வீடியோ.

மேலும், நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர். இதில் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் சமீபத்தில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’96’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து அனைவரின் பாராட்டினையும் பெற்றிருந்தார் ஆதித்யா பாஸ்கர்.

Advertisement