கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் மாரடைப்பா ? விவேக் நிலை குறித்து SIMS மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை.

0
1748
vivek
- Advertisement -

நேற்று கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகர் விவேக் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனையும் இருக்கும். அதனால் தான் இவரை மக்கள் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைத்து வருகின்றனர்

-விளம்பரம்-

நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : 17 வயது பெண்ணிற்கு தொல்லை கொடுத்தாரா பிக் பாஸ் டேனியல் ? வெளியான ஆதாரத்தால் சர்ச்சை.

- Advertisement -

நடிகர் வீட்டில் இருந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டடு நெஞ்சிவலி ஏற்பட்டுள்ளது இதனால் அவரது குடும்பத்தினர் அவரை Sims மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர். இதனால் அவருக்கு, Catheterization எனப்படும் இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஸ்டென்ட் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதே போல அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டதால் தான் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது என்று சர்ச்சை எழுந்தது. ஆனால், இதனை மறுத்து விவேக் அனுமதிக்கப்ட்டுள்ள மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பூசியால் விவேக்கிற்கு நெஞ்சு வலி ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement