கவலபடாதீங்க என்னுடைய +2 மார்கே இவ்ளோதான் – குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்திய மாதவன்.

0
1215
madhavan
- Advertisement -


தமிழகத்தில் இன்று +2 முடிவு நாள் என்பதால் , பல மாணவர்கள் பதட்டமாகவும் பயத்துடன் காணப்பட்டு வந்தனர். இது இப்போது மட்டுமல்ல நாமும் நமது பள்ளிப்பருவத்தில் +2 மார்க் கம்மியாக வந்துவிட்டால் வாழ்க்கையே போய்விட்டது என்று புலம்பியும் இருப்போம். பெரும்பாலும், மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை இந்த மதிப்பெண்களை தீர்மானிக்க மாட்டார்கள் என்பதைக் இந்த கட்டத்தில் உணரத் தவறிவிடுகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகர் மாதவன் இன்று வெளியான தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்களுக்கு ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், இன்று தேர்வு முடிவுகள் பெற்ற அனைவருக்கும் இந்த பதிவு. எதிர்பார்த்ததை போல அதிக மதிப்பெண்கள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதேபோல குறைவான மதிப்பெண்களை பெற்றவர்களே, நான் என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 58 சதவீதம் தான் எடுத்தேன். எனவே, உங்களின் வாழ்க்கை என்னும் தொடக்கூட இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் மாதவன். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியிலும் இவருக்கென்று தனித்துவமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அரவிந்த் சாமிக்கு பின்னர் சாக்லேட் பாய் என்ற பெயரை எடுத்தவர் இவர் தான். நடிகர் மாதவன் இயற்பெயர் மாதவன் பாலாஜி ரங்கநாதன்.இவர் ஜூன் மாதம் 1ஆம் தேதி 1970 ஜாம்சத்பபூர் மாநிலம் பீகாரில் பிறந்தார்.

நடிகர் மாதவன் படங்களில் நடிகத்துவங்கும் முன்னறே திருமணம் செத்துக்கொண்டாலும் அவர் பொது நிகழ்ச்சிகளில் அவரது மனைவியை பெரிதாக அடையாளபடுத்திக் கொண்டதில்லை.நடிகர் மாதவன் சரிதா பிரிஜி என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.மேலும் மாதவனுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரே ஒரு அழகான மகன் உள்ளார். அவருடைய பெயர் வேதாந்த .

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-1.png

பார்ப்பதற்கு அப்படியே சின்ன வயது மாதவனை போலவே இருக்கும் இவர் இந்த சிறு வயதிலேயே விலங்குகள் மீது மிகுந்த அக்கரை கொண்டுள்ளார். இதனாலேயே இவர் வீட்டினில் இரண்டு நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி இவருக்கு நீச்சல் திறமையும் இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஜூனியர் நீச்சல் போட்டியில்மாதவன் மகன் வேதாந்த், வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement