இதுக்கு தான் ஒழுங்கா போஸ் கொடுக்கணும் – சர்ச்சையை ஏற்படுத்திய மனோபாலாவின் புகைப்படம். (செத்துட்டார்னு சொல்லிட்டாங்க)

0
2042
mano
- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல்வேறு துயர் சமபாவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பல்வேறு பிரபலமான நடிகர்களின் மரணம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விவேக் காலமாகி இருந்தது தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து கே வி ஆனந்த், பாண்டு என்று பலர் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இப்படி கொரோனாவால் பல்வேறு பிரபலங்கள் மரணத்து வரும் நிலையில் சமீப காலமாக பல்வேறு பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக காலமாகி வரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக நெல்லை சிவா காலமாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபல காமெடி நடிகரான மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி செய்தி பரவியது. தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் மனோபாலா. இவரை பெயரை சொன்னதும் முதலில் நினைவிற்கு வருவது இவரது ஒல்லியான உருவம் தான்.

இதையும் பாருங்க : பக்கத்துல இருந்து பார்த்தா மாதிரி எழுதுவாங்க, தோள்ல துண்டு போட்டு பஞ்சத்துக்கு வந்திருக்காங்க – மோகன் போட்ட பதிவு.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது. அதற்க்கு முக்கிய காரணமே சமீபத்தில் இவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் தான். சமீபத்தில் மனோ பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் ஐயா என்று பதிவிட்டு கண்ணீர் விட்டு அழும் அமோஜியை போட்டிருந்தார்.

இதற்கு காரணம் என்னவென்று கேட்டதற்கு ஹாஸ்பிடல் மாதிரி இருக்கு அதான்’ என்று கூறியிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் பல்வேறு மீம்களாக வைரலானது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்த மனோபாலா, என் அன்பு மக்களே…நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்..ஒண்ணுமில்லை…அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement