நடிகர் மன்சூர் அலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா. அட, படத்துல வேற நடிச்சிருக்காங்க.

0
1722
mansoor
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் மன்சூர் அலிகான். இவர் 90 கால கட்டங்களில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து உள்ளார். இவர் திரைப்பட நடிகர் என்பதை தாண்டி ஒரு அரசியல்வாதியும் ஆவார். நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் தமிழ் முதலில் சண்டை பயிற்சியாளராக தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
Alikhan

பின் இவருடைய உருவத்தையும், நடிப்பு பாவத்தையும் பார்த்து படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதற்கு பிறகு இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர். சமீப காலமாகவே நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் படங்களில் பிஸியான காமெடியனாக நடித்து வருகிறார். மேலும், இவர் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தும் வருகிறார். கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ஜாக்பாட். இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் காமெடியனாக நடித்து அசத்தி இருந்தார்.

இதையும் பாருங்க : பலவேறு தாழ்வு மனப்பான்மையை கடந்து நடிகையாக களமிறங்கிய சாய் பல்லவியின் தங்கை. ஹீரோ யார் தெரியுமா ?

- Advertisement -

அதே போல் இந்த ஆண்டுக்கான பல படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்து உள்ளார். மேலும், சில படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மன்சூர் அலிகானை தான் யோசித்து வைத்திருந்தாராம். அதை ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் அவர்களே கூறியிருந்தார். அதற்குப் பிறகு தான் நடிகர் கார்த்திக்கை வைத்து படம் எடுத்தாராம்.

இவருக்கு இரண்டு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இவரது முதல் மகள் தில்ருபா. கடந்த வருடம் தில்ருபாவிற்க்கு தமிழ் திரையுலகை அழைத்து திருமணம் செய்து வைத்தார் மன்சூர்.இவருடைய இரண்டாவது மகள் பெயர், ஜூலைகா. 2016ல் வெளிவந்த ‘பூதாளம்’ என்ற படத்தில் பூமாதேவி கேரக்டரில் நடித்திருப்பார் ஜூலைகா. இந்த படத்தில் தன்னுடைய மகள் மற்றும் மூன்று மகன்கள், மகபிர், கஜினி மற்றும் ஷெர்ஷா ஆகியயோரைம் நடிக்க வைத்து இருந்தார் மன்சூர்.

-விளம்பரம்-
Advertisement