பலவேறு தாழ்வு மனப்பான்மையை கடந்து நடிகையாக களமிறங்கிய சாய் பல்லவியின் தங்கை. ஹீரோ யார் தெரியுமா ?

0
847
sai

சினிமாவை பொறுத்த வரை எத்தனையோ வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கின்றனர். அதே போல எத்தனையோ நடிகர் நடிகைகளின் சகோதர சகோதரிகள் கூட சினிமாவில் அறிமுகமாகி இருக்கின்றனர். நக்மா தங்கை ஜோதிகா, சிம்ரன் தங்கை மோனல், அம்பிகா தங்கை ராதா என்று எத்தனையோ முன்னணி நடிகைகளின் தங்கைகள் சினிமாவில் நடிகைகளாக கலக்கினார்கள். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் சாய் பல்லவியின் தங்கையும் சினிமாவில் நடிகையாக களமிறங்கி இருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is sai-pallavi.jpg

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர்.அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ், மலையாள, தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் மாரி 2 படத்தில் இவர் செம ஆட்டம் போட்ட ரவுடி பேபி பாடல் இணையத்தில் படு வைரலாக பரவி யூடுயூபில் சாதனையும் படைத்தது. சினிமாவில் வரும் முன்னரே டாகடர் படிப்பை படித்து வந்தார் சாய் பல்லவி. சினிமாவில் நடிக்க துவங்கியதும் தம்மால் சினிமா மற்றும் டாக்டர் தொழிலை ஒரேய நேரத்தில் பார்க்க முடியாது என்று கூறி தனது பெயருக்கு பின்னால் டாக்டர் பட்டத்தை கூட போட்டுக் கொள்ளவில்லை சாய் பல்லவி.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை சாய் பல்லவியை அழகு சாதன நிறுவனம் ஒன்று அணுகி தங்களது விளம்பரத்தில் நடிக்க கேட்டுள்ளனர்.அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக அதற்கு 2 கோடி சம்பளமும் பேசியுள்ளனர். ஆனால், அந்த விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துள்ளார்.என் தங்கைக்கு அவளை விட நான் வெள்ளையாக இருக்கிறேன் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது.வெள்ளையாக வேண்டும் என்பதற்காக அவர் காய் மற்றும் பழங்களை சாப்பிட்டால். அப்போது தான் நான் உணர்தேன் வெள்ளை ஆக வேண்டும் என்பதற்காக அவள் தனக்கு பிடிக்காததை கூட செய்தால்.

அப்படி இருக்க நானே கிரீம் தடவினால் வெள்ளை ஆகலாம் என்று மக்களிடம் பொய் சொல்லி ஒரு விளம்பரத்தில் நடிக்க முடியுமா என்று கூறி இருந்தார். இப்படி சிறு வயதிலேயே தாழ்வு மனப்பான்மை கொண்ட சாய் பல்லவியின் தங்கை தற்போது சினிமாவில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை பிரபல ஸ்டண்ட் மேன் ஸ்டண்ட் சில்வா இயக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

Advertisement