தமிழனாக பிறக்கனும், சென்னையில தண்ணீல மிதக்கனும் – மன்சூர் அலிகானின் வைரல் வீடியோ

0
314
Mansoor
- Advertisement -

கனமழை வெள்ளத்தில் பாட்டு பாடி படகு ஓட்டி சென்ற மன்சூர் அலிகானின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதனால் சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கனமழையால் வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. குறிப்பாக இந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து கொண்டே வருகிறது. நேற்றிரவு முதல் தற்போது வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பொளந்து கட்டுகிறது.

-விளம்பரம்-

இதனால் சென்னை சாலைகளும், தாழ்வான பகுதிகளிலும், மற்றும் வீடுகளை சுற்றிலும் வெள்ளக்காடாக நீர் தேங்கி நிற்கிறது. மேலும், குடியிருக்கும் பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் நீரில் படகோட்டி பாட்டு பாடி சென்று இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க : இப்படி அருவருப்பான விஷயத்தை செஞ்சிட்டு அவர் மன்னிப்பு கேக்காததற்கு காரணம் இதான் – ராஜுவை வெளுத்து வாங்கிய ஜேம்ஸ் வசந்தன்.

- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகான் குடியிருக்கும் பகுதியில் பெய்த கனமழையால் குளம் போல் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் மன்சூர் அலிகான் பாத் டப்பில் கப்பல் ஓட்டி சந்தோசமாக பாட்டு பாடி சென்று இருக்கிறார். அதில் அவர் தமிழ்நாட்டில் பொறக்கணும், சென்னை தண்ணியில மிதக்கனும், நான் தமிழனாக பிறக்கனும், சென்னையில் கார் ஓட்டி மகிழனும் என்று பாட்டு பாடி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் மேற்கே உள்ள பகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலி கான் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனிடையே தனது வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட வளர்ப்பு பூனையை மீட்க சென்றிருந்தார். ஆனால், ஒரு மாதமாக பூனை வீட்டுக்குள் உணவின்றி இருந்ததால் உயிரிழந்து இருக்கிறது. இதனால் தனது வீட்டை திறக்க வேண்டாம் என மனமுடைந்து மன்சூர்அலிகான் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement