பொண்ணை தானே ரூமுக்கு கூப்பிட்டாரு..!வைரமுத்துக்கு ஆதரவாக பேசிய பிரபல நடிகர் திமிர் பேச்சி..!

0
826
vairamuthu-issue
- Advertisement -

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

marimuthu

- Advertisement -

சின்மயிக்கு பிறகு சினிமா துறையில் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியில் தொல்லை குறித்து குற்றச்சாட்டை வைத்து வந்தாலும் வைரமுத்து மீது பாடகி சின்மயி வைத்த குற்றச்சாட்டு தான் பரபரப்பாக இன்னமும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சின்மயி ,வைரமுத்து விவகாரம் குறித்து தமிழில் பல படங்களில் குணசித்ர நடிகராக நடித்த மாரிமுத்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் புகழ், கடைக்குட்டி சிங்கம், பரையேறும் பெருமாள் போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் மாரிமுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் வைரமுத்து-சின்மயி விவகாரம் குறித்து கேட்கப்பட்ட போது, ஒரு ஆண் மற்றொரு ஆணை படுக்கைக்கு அழைத்தால் தான் தவறு.

-விளம்பரம்-

ஒரு ஆண் ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைப்பது என்ன தவறு.இஷ்டமிருந்தால் வருவார்கள் இல்லை என்றால் போவர்கள் இல்லை என்றால் மீடியாவிற்கு செல்வார்கள். இந்த விஷயத்தை மறந்துவிட்டு வேறு பிரச்சனை குறித்து பேச ஆரம்பித்துவிடுவோம். இதனால் கவிஞருக்கு இழுக்கு என்று நான் சொல்லவே மாட்டேன். ஒரு பொம்பள பிள்ளையை கட்டிப்பிடித்து படுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் அல்லவா. அதனால் தான் கூப்பிடிருக்கிறார்.காரில் செல்லும் போது சைக்கிள்காரன் பின்னால் இடித்துவிட்டால் சாரி சொல்லி விட்டு செல்வது இல்லையா.இது வைரமுத்துவுக்கு ஏற்பட்ட ஒரு சின்ன தடுமாற்றம் அவ்வளவு தான். இந்த விடயத்தில் வைரமுத்துவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர் தமிழுக்காக செய்த தொண்டு ஏராளம். இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த பிரச்சனையா அனைவரும் மறந்து விடுவார்கள்.

Advertisement