பிகில் ராயப்பன் கெட்டப்பில் மயில்சாமி – அட, பக்கா வில்லன் லுக்ல இருக்காரே.

0
4013
mayil
- Advertisement -

தமிழ் சினிமா கலைவாணர் முதல் தற்போது சந்தானம், சூரி வரை காமெடிக்கு பஞ்சம் இல்லாத படங்களை கொடுத்து வருகிறது. காலத்திற்கு பல காமெடி நடிகர்கள் வந்து முத்திரை பதித்து வருகின்றனர். காமெடி நடிகர்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என்று இவர்கள் தான் நினைவிற்கு வரும். ஆனால், 90ஸ் ரசிகர்களுக்கு சார்லி, தாமு, மயிலசாமி, வையாபுரி ஆகியோரின் காமெடிகள் பற்றி நன்கு தெரியும். ஆனால், இவர்கள் எல்லாம் தற்போது உள்ள படங்களில் காணப்படுவது இல்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகர் மயில்சாமி பிகில் பட ராயப்பன் ஸ்டைலில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் வாயடைத்து போய்யுள்ளனர்.மேலும், இவர் வில்லனாகவே நடிக்கலாம் என்று பலர் கூறி வருகின்றார்கள். விவேக் இருந்த வரை மயில்சாமி விவேக்குடன் பல படங்களில் நடித்து இருந்தார். ஆனால், சமீப காலமாக இவரை அதிக படங்களில் காண முடியவில்லை.

இதையும் பாருங்க : இந்த முஞ்சிகேல்ல லேடி கெட்டப்பா – ஆரம்பத்தில் முடியவே முடியாது என்று சொன்ன விஜய். பின் எப்படி ஒப்புக்கொண்டுள்ளார் பாருங்க.

- Advertisement -

நடிகராக மட்டுமில்லாமல் இவர் தீவிர அரசியல்வாதியும் ஆவர். ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பு வரை அ.தி.மு.க-வில் இருந்த நடிகர் மயில்சாமி, ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.கவிலிருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் மயில்சாமி. ஆனால், இவர் போட்டியிட்ட தொகுதியில் மயில்சாமிக்கு 1,435 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

மயில்சாமி

தோல்விக்கு பின் பேசிய மயில்சாமி, 1,435 பேர் என்னைத் தேடி வாக்களித்திருக்கிறார்கள். என் பெயர் இரண்டாவது வாக்குப் பெட்டியில் கடைசியிலிருந்தது. ஆனாலும் 1,435 பேரும் என்னைத் தேடி வாக்களிச்சிருக்காங்கன்னா அது எவ்வளவு பெரிய விஷயம்? உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். விஜயகாந்த்தின் தே.மு.தி.க கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளருக்கே எனக்குச் சமமான வாக்குகள்தான் விழுந்திருக்கு. அப்படியிருக்கும்போது எந்தக் கட்சியையும் சாராமல் சுயேச்சையாகப் போட்டியிட்ட எனக்குச் சந்தோஷம்தான் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement