40 வயசுல வாழ்க்கையே முடிஞ்சுருனு சொல்லுவாங்க எனக்கு 40 வயசுல தான் வாழ்க்கையே ஸ்டார்ட் ஆச்சு – மொட்ட ராஜேந்தர் பகிர்ந்த அறிய புகைப்படம்.

0
1039
motta
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடூர வில்லனாக இருந்த பொன்னம்பலம், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் என்று பல வில்லன்கள் தற்போது காமெடியனாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது காமெடியியிலும்,வில்லன் வேடத்திலும் தமிழ்த்திரையுலகை கலக்கி வருபவர் ராஜேந்திரன்.எப்பொழுதுமே மொட்டை தலை, கரகரவென்ற தனித்த குரல் இதான் மொட்டை ராஜேந்திரனின் அடையாளம். ஆரம்ப காலத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தாலும் அதைத்தொடர்ந்து வில்லன் பாத்திரத்திலும், காமெடி பாத்திரங்களிலும் தற்பொழுது குணச்சித்திரப் பாத்திரங்களிலும் அசத்தி வருகின்றார்.

-விளம்பரம்-

மொட்டை ராஜேந்திரன் ஆரம்பத்தில் ஒரு டூப் மேனாக தான் சினிமாவில் பணியாற்றி வந்தார். இவர் சினிமாவில் தோன்றும் முன்னரே பல படங்களில் ஸ்டாண்ட் காட்சிகளுக்கு டூப் மேனாக இருந்துள்ளார். அதன் பின்னர் தான் இவர் திரைப்படத்தின் சண்டை காட்சிகளில் பைட்டராக நடிக்க துவங்கினார். இவர் டூப் மேனாக இருந்த போது கேரளாவில் ஒரு ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளார். ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபொழுது வில்லன் ஒரு கழிவு வாய்க்காலில் குதிப்பது போன்றதொரு காட்சிக்காக அப்படியே கழிவுநீரில் குதித்துவிட்டாராம்.

- Advertisement -

அதன் பின்னர் அவரது உடலிலே தோல்நோய் ஏற்பட்டு அவரது உடலிலிருந்து அத்தனை முடிகளும் கொட்டத்தொடங்கி விட்டனவாம். குரலும் மாறிவிட்டதாம். அதன் பின்னர் எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரிசெய்ய முடியவில்லையாம்.கால ஓட்டத்தில் மொட்டை ராஜேந்திரன் மாறிய குரலாலும்,உருவ தோற்றத்தினாலுமே அனைவரும் ரசிக்கும் படியாக நடித்து பிரபலமாகியும் விட்டார். நான் கடவுள் படத்திற்கு பின்னர் தான் இவரை பலரும் தெரியும்.

ஆனால், அதற்கு முன்பாகவே இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதுவும் அப்போதெல்லாம் தலையில் முடியுடன் தான் இருந்துள்ளார்.இப்படி ஒரு நிலையில் மொட்ட ராஜேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது எப்போதும் மொட்டை தலையுடன் இருக்கும் அவர் அந்த புகைப்படத்தில் கரு கரு முடியுடன் தோற்றமைளிக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு ’40 வயசுல வாழ்க்கையே முடிஞ்சுருனு சொல்லுவாங்க எனக்கு 40 வயசுல தான் வாழ்க்கையே ஸ்டார்ட் ஆச்சு’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement