முரளியின் காதல் கதைக்கும் குஷி படத்திற்கும் ஒரு கனெக்ட் இருக்கு- இது தெரியாம போச்சே

0
64
- Advertisement -

நடிகர் முரளியின் காதல் கதை குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்இந்திய சினிமா திரை உலகில் 80,90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் முரளி. இவரை அதிகம் இதயம் முரளி என்று தான் அழைப்பார்கள். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் கன்னட திரை உலகில் பிரபல தயாரிப்பாளர் சித்தலிங்க அய்யாவின் மகன் ஆவார்.

-விளம்பரம்-

மேலும், இவர் கனடாவில் வெளிவந்த பிரேம பார்வை என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்குப் பிறகு இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி இருந்த பூ விலங்கு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கு என ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். அதோடு இவர் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

முரளி திரைப்பயணம்:

அதிலும், இவர் நடித்த புதுவசந்தம், இதயம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றி கொடி கட்டு, ஆனந்தம், சமுத்திரம், கனவே கலையாதே, சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் இருக்கிறது. இவர் சிவாஜி கணேசன், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபு தேவா, மம்முட்டி, சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். இன்னொரு பக்கம், இவர் ஜெயலலிதா அம்மாவின் மீது அதிக பற்று கொண்டவர்.

முரளி குடும்பம்:

அதன் காரணமாக அதிமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு இருந்தார். இதனிடையே முரளி அவர்கள் ஷோபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும், காவியா என்ற மகளும் உள்ளார்கள். அதர்வா தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக கலக்கி கொண்டிருக்கிறார். அதோடு அதர்வா நடித்த பாண காத்தாடி என்ற படத்தில் முரளி அவர்களும் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

முரளி இறப்பு:

மேலும், இதுவே அவருடைய கடைசி படம் என்றுகூட சொல்லலாம். அதன் பின் மாரடைப்பால் முரளி தன்னுடைய 48 வயதில் இறந்து விட்டார். இந்த நிலையில் நடிகர் முரளியின் காதல் கதையும் விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படத்தின் காட்சியும் ஒன்று என்ற தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதோடு விஜயின் குஷி படம் ரிலீசான தேதியும், நடிகர் முரளியின் பிறந்த நாளுமே ஒன்று. காரணம் நடிகர் முரளி தன் நண்பனின் காதலுக்காக உதவப் போயிருந்தார். அப்போதுதான் அவருடைய மனைவி சோபாவை முதன் முதலில் பார்த்தார். அந்த காதல் ஜோடி சந்தித்துக் கொள்ள இவர்கள் இருவரும் துணையாக நிற்பார்கள்.

முரளி காதல் கதை:

அப்படி சந்திக்கும்போதும் தான் இவர்களிடையே காதல் மலர்ந்தது. இப்படி இவர்கள் வாழ்க்கையில் நடந்தது குஷி படத்திலும் ஒரு காட்சி வைத்திருப்பார்கள். படத்தில் தன்னுடைய காதலை முரளி வெளிப்படுத்தாமல் இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் சீக்கிரமாக தன்னுடைய மனைவியிடம் சொல்லிவிட்டார். இருந்தாலும் தான் கருப்பாக இருப்பதால் தன்னுடைய காதலை அவர் ஏற்றுக் கொள்வாரா என்ற தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஆனால் சோபா முரளியின் காதலை ஏற்றுக் கொண்டார். இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள்.

Advertisement